அருணாச்சல் மலைக்கு தலாய் லாமா பெயர்: சீனா எதிர்ப்பு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை செல்லாத மலைச்சிகரம் ஒன்றுக்கு தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) ஒரு குழுவினர் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெற்றிகரமாக 20,942 அடி உயரத்தில் உள்ள அதன் உச்சியை அடைந்தனர். இதையடுத்து அந்த சிகரத் துக்கு சாங்யாங் கியாட்சோ என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ‘‘ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவுக்குஉரிய பகுதியாகும். … Read more

ஹிஸ்புல்லாக்களின் அடுத்த தலைவராகிறார் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ​​ஹஷேம் சஃபிதீன்

பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சஃபிதீனும் கொல்லப்பட்டத்தாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உருவ ஒற்றுமையில் நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பில் … Read more

நான் விஜய்யின் தீவிர ரசிகர்: லப்பர் பந்து ஹீரோ ஹரிஷ் கல்யாண்!

லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.  

சந்தையில் உலவும் டூப்ளிகேட் ஐபோன்கள்…. வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்க மக்களே

ஐபோன் 16 மொபைல் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. ஐபோன் 16 போன்று போலிகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டிருப்பதால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மாடலை ஆப்பிள் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து மட்டுமே வாங்க முயற்சிக்கவும். மலிவாக வாங்கும் ஆசையில் வேறு உள்ளூர் கடைகளில் வாங்கும்போது, டூப்ளிகேட் ஐபோன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும்  வாய்ப்பு உள்ளது. … Read more

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 195 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 195 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

தொடர்ந்து ஃபாலோ செய்தார்.. அப்படி நடந்துகொண்டேன்.. செல்ஃபி சர்ச்சைக்கு பிரியங்கா மோகன் விளக்கம்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக சரிபோதா சனிவாரம் படம் வெளியானது. படத்துக்கு ஓரளவு நல்ல விமர்சனமே கிடைத்த சூழலில் சமீபத்தில் நடந்த விவகாரம் குறித்து

Udhayanidhi Stalin: “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் விமர்சிக்கட்டும்" – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவிருக்கிறார். இதற்கு முன் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது போல, இன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். கருணாநிதி – ஸ்டாலின் – உதயநிதி Udhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் அதுவும் சட்டமன்ற உறுப்பினரான … Read more

“அமைச்சரவையில் சமூகநீதியை நிலைநாட்டிவிட்டதாக திமுக நாடகம்” – ராமதாஸ் சாடல்

சென்னை: “அமைச்சரவையில் சில நகாசு வேலைகளை செய்ததன் மூலம் அமைச்சரவையில் சமூகநீதியை நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. பட்டியலினத்தவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைச்சரவையின் அதிகாரப்படிநிலையில் முதல் 3 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் முதல் 5 இடங்களிலோ பட்டியலின சகோதரரோ, சகோதரியோ எப்போது நியமிக்கப் படுகிறார்களோ அப்போது தான் அமைச்சரவையில் சமூகநீதி என்பதை பேசும் தகுதி திமுகவுக்கு வரும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக … Read more

மணிப்பூர் மாநிலத்தின் 3 மாவட்டங்களில் பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக் கும் அதையொட்டிய மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது இனக் கலவரமாக மாறியதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூரின் 3 மாவட்டங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். காங்போக்பி மாவட்டம் லோச்சிங் ரிட்ஜ் பகுதியில் மாநில போலீஸார், … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.