டெல்லி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர், நடத்துநர் குறைகளை கேட்டறிந்த ராகுல்!

புதுடெல்லி: டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ளார். இவர்கள் தனியார்மய அச்சத்தில் வாழ்ந்து வருவதாக ராகுல் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் நேற்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ராகுல் தனது சமூக ஊடகப் … Read more

கருடசேவை நாளில் திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது அன்று. திருமலைக்கு ஏராளமான … Read more

12 தமிழக மீனவர்களுக்கு தலா 1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு.. என்ன நடந்தது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் செலுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைச் Source Link

துபாய்க்கு கூட்டிப்போய் பலாத்காரம் செய்தாரா நிவின் பாலி?.. Casting Call நடத்தியதே அதற்குத்தானா?

திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலி இளம் பெண்கள் வேண்டும் என காஸ்டிங் கால் நடத்தியதே இப்படி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்யத்தானா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் #NivinPauly ஹாஷ்டேக்கை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், நிவின் பாலி நடித்த மலையாளி ஃபிரம்

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மழையுடனான காலநிலை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

“பா.ஜ.க வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க கூட்டணியில் தொடர்கிறேன்!”

பா.ஜ.க-வுடன் தி.மு.க காட்டிவரும் இணக்கம், சர்ச்சையான முருகன் மாநாடு, தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு உள்ளிட்ட கேள்விகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனைச் சந்தித்தேன்… “எல்லோரும் முருகன் மாநாட்டின் தீர்மானங்களை விமர்சித்துக்கொண்டிருக்கும்போது, நீங்களோ ‘மாநாடு நடத்தியதே தவறு’ என்கிறீர்களே ஏன்?!” “மதச்சார்பற்ற கொள்கையைப் பேசி, அனைத்து மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க அரசு, இப்போது முருகருக்கு மாநாடு நடத்தியதை நான் எதிர்க்கிறேன். மதச்சார்பற்ற அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தலைமையில் இப்படியான … Read more

பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்!

கோவை: பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். பாரிஸ் நகரில் தமிழக வீராங்கனைகள் உள்ளிட்ட பாராலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை … Read more

கர்நாடக அரசை கவிழ்க்க மீண்டும் ஆபரேஷன் தாமரை?  – காங். எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்படுவதால் சித்தராமையா அதிர்ச்சி    

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இந்நிலையில், சித்தராமையா மீது பழங்குடியினர் நல வாரிய ஊழல், மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் விதிமுறை மீறல் ஆகிய பிரச்சினைகளால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஒருவேளை சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், யாரை முதல்வராக நியமிப்பது என காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. இதேபோல … Read more

ஆந்திர வெள்ள பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் விநியோகம்

விஜயவாடா ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரயில் சேவை, போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளுக்குள்ளேயும் மொட்டை மாடிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் … Read more

Amala paul: ரொம்ப போர் அடிக்குதாம் அமலா பாலுக்கு.. காலை பிடித்துவிட்ட கணவர்.. கியூட்!

சென்னை: நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு உள்ளிட்ட தளங்களில் பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான ஆடுஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏஎல் விஜய்யுடனான பிரிவிற்கு பிறகு