`சின்ன எலிதான்… அதை தூக்கிப்போட்டுட்டு வடையைச் சாப்பிடு!' – அதிர்ச்சி கொடுத்த டீக்கடைக்காரர்!

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் அருகே பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீக்கடை மற்றும் பலகாரக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு குளித்தலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது: 33), பாபு நடத்திவரும் டீக்கடைக்குச் சென்று அங்கு ஒரு போண்டா, ஒரு பருப்பு வடை வாங்கி உள்ளார். அதில், பருப்பு வடையைப் பாதிச் சாப்பிட்டுப் விட்டு பார்க்கையில், உள்ளே சிறிய எலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். … Read more

“தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தவறானது” – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி 

கோவை: “தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது,” என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய பள்ளி கல்வித் … Read more

ஆந்திரா, தெலங்கானாவில் மழை பலி 31 ஆக அதிகரிப்பு; வெள்ளத்தில் பல லட்சம் மக்கள் பாதிப்பு

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை – வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 3 … Read more

இந்திய அணிக்கு பெரிய பிரச்னை… சூர்யகுமார் யாதவிற்கு காயம் – மிஸ்ஸாகும் பல போட்டிகள்!

Suryakumar Yadav Injury: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். உலகின் நம்பர் டி20 பேட்டரான இவரை இந்திய அணி தற்போது டெஸ்ட் பக்கம் கொண்டு வரவும் முயற்சித்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியில் தற்போது மிடில் ஆர்டர் பேட்டருக்கான தேடல் நீண்டுள்ளது. அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவிற்கும் (Suryakumar Yadav) ஒரு வாய்ப்பை வழங்க சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழங்கி இருக்கிறார் எனலாம்.  முக்கியத்துவம் பெறும் … Read more

பாரிஸ் பாரா ஒலிம்பிக் : பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்

பாரிஸ் பாராலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இந்த போட்டித் தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம் வென்றுள்ளது. ஆடவர் எஸ் எல் 3 பேட்மிண்டன் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தலை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் நிதேஷ்குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வெற்றிபெற்றார்.

ஒரு கை சோறு சாப்பிடலையே.. நெஞ்சமெல்லாம் துடிக்கிது.. வாழை படத்தை வாழ்த்திய ரஜினி!

சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படமாக உருவாகி வெளியானத் திரைப்படம் வாழை. இப்படத்தை அனைவரும் பாராட்டி வாழ்த்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இப்படத்தை வெகுவாக புகழ்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொன்வேல்,

அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் பற்றிய அறிவித்தல்…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு அடையாளமிடுதல் எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம் பெற உள்ள நிலையில், வாக்கு அடையாளமிடுதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை,

Paralympics : அடுத்தடுத்து இரண்டு பதக்கங்கள்… பாரீஸில் அசத்திய தமிழக வீராங்கனைகள்!

பாரீஸில் பாராலிம்பிக்ஸ் தொடர் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்றிருந்தனர். அந்த எண்ணிக்கையை முறியடிக்கும் முனைப்போடு இப்போது பாரீஸில் ஆடி வருகின்றனர் மனிஷா இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் இப்போது கலக்கியிருக்கின்றனர். பாரா பேட்மின்டனில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கத்தையும், திருவள்ளூரைச் சேர்ந்த மனீஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர். துளசிமதி துளசிமதி முருகேசனுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக்ஸ். கடந்த 2022-ம் ஆண்டு சீனாவில் … Read more

மழை, வெயிலில் தவித்த மலைவாழ் மக்களுக்கு 10 வீடுகள் – மதுரை ஆட்சியரின் முன்னெடுப்பு

மதுரை: மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தேன், கிழங்கு, மூலிகைப்பொருட்களை சேகரித்து விற்பனை செய்கின்றனர். வாழ்வாதாரத்துக்காக இவர்களுடன் … Read more

இரண்டு நாள் பயணமாக நாளை புரூனை செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக நாளை (செப்.3) புரூனை தருஸ்ஸலாமுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் பயணம் இந்தியாவுக்கும் புரூனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் துவங்கி 40 ஆண்டுகளை குறிக்கும் வகையில் அமையவிருக்கிறது. இந்தியாவுக்கும் புரூனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் புரூனையும் இணக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் … Read more