கங்கனா ரணாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்… சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் எமர்ஜென்சி படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தை செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். தணிக்கை வாரியத்திடம் இருந்து படத்திற்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கங்கனா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படம் தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று … Read more

ஓவர் தலையீடு?.. மாசு பட தோல்விக்கு சூர்யா காரணமா?.. வெங்கட் பிரபு பேச்சால் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இப்போது விஜய்யை வைத்து அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் வெங்கட் பிரபு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி கொடுத்த ஒரு பேட்டியில் அவர் பேசிய விஷயம் புதிய

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது

அகர்தலா, வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வங்காளதேசத்தின் எல்லையையொட்டி … Read more

வங்காளதேசம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

டாக்கா, வங்காளதேச தலைநகர் டாக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன் அஷனுல் ஹகி நேற்று சாலைவிபத்தில் படுகாயமடைந்தார். அவர் டாக்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அஷனுல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சிகிச்சை அளித்ததில் டாக்டர்கள் அலட்சியம் காட்டியதாலேயே மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், ஆத்திரத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்களை உறவினர்கள் தாக்கினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு … Read more

விவாகரத்து சர்ச்சை: கணவன் அபிஷேக் பச்சனுடன் துபாயில் வலம் வந்த ஐஸ்வர்யா ராய்; வைரலாகும் வீடியோ!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதனை நிராகரிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா, கணவர் அபிஷேக் பச்சன் என மூன்று பேரும் துபாய் விமான நிலையத்தில் இறங்கி விமான நிலைய பஸ்ஸில் ஏறிச்சென்ற வீடியோ … Read more

பாஜக கார்ப்பரேட் கம்பெனி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா? – ஹெச்.ராஜா கேள்வி

சென்னை: பாஜக கார்ப்பரேட் நிறுவனம் என்றால் பழனிசாமி அதிமுக என்றநிறுவனத்தின் நிர்வாக இயக்குநரா என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பாஜக வழிகாட்டுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஹெச்.ராஜா ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் பேசியது தொடர்பாக வெளியில் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை.கடந்த 5 ஆண்டுக்கு … Read more

சமோசா விற்றுக்கொண்டே நீட் தேர்வில் சாதனை – உ.பி. மாணவர் தினமும் 5 மணி நேரம் வேலை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்சன்னிகுமார்(18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடைநடத்தி விற்பனை செய்து வந்தார். அதே நேரத்தில்எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆசைப்பட்ட சன்னிகுமார், சமோசா விற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்த மே மாதம்சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் வெளியான நிலையில்அவர் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமோசா கடையில் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே … Read more

ஓடிடியில் ’ரகு தாத்தா’ படம் வெளியீடு எப்போது?

சென்னை’ வரும் 13 ஆ தேதி ஓடிடியில் அன்று கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்பட்ம் வெளியாகலாம் என தகவல்கள் வந்துள்ளன தென் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே மத்தியில் … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. ட்ரோன் மூலம் வெடி குண்டு வீசி தாக்குதல்! அச்சத்தில் மக்கள்!

இம்பால்: மணிப்பூர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதற்றமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வன்முறைகள் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காங்போக்பியில் உள்ள நகுஜாங் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Source Link