“2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை; தனித்தே போட்டி” – சீமான் திட்டவட்டம்

சென்னை: “2026ல் தனித்து போட்டியிடுகிறேன். 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: “இந்த ஃபார்முலா பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லாம் ஓடுவதற்கு திடல் இல்லை, கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து எதுவும் விளையாட எங்களுக்கு வழியில்லை. இதைப் போல சிற்றூர்களில் இருக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக மாற்றுவது என்பது சரி. ஆனால் இப்போது … Read more

இந்தியாவில் தீவிரவாத படை உருவாக்க சதி: என்ஐஏ தீவிர விசாரணை

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாத படை உருவாக்க சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக அஜீஸ் அகமது என்கிற நபர் தேசிய புலனாய்வு முகமையால் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஜீஸ் அகமது என்கிற ஜலீல் அஜீஸ் அகமது கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தில் தப்பியோட முயன்றபோது பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பின்தீவிர அடிப்படைவாத கொள்கையின் தாக்கத்தில் செயல்பட்டு வரும் … Read more

200 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஆந்திராவில் 9 பேர் மரணம்

அமராவதி ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது.  கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

விஜய் கட்சியில் ஓ.பி.ரவீந்திரநாத்? எங்கள் பிளான் இதுதான்.. உடைத்து பேசிய ஓ பன்னீர்செல்வம்

தென்காசி: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் கட்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இது தொடர்பாக மிக முக்கிய பதிலை அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் Source Link

மேடையில் நடனமாடிய நடிகை.. ஆபாச சைகை காட்டிய நடிகர்.. குவியும் கண்டனம்!

சென்னை: திரும்பி பக்கம் எல்லாம் கண்ணிவெடி என்பது போல, மலையாள நடிகர் மோகன்லால், தற்போது பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர், நடிகை ஒருவர் நடனமாடிய போது, ஆபாசமாக சைகை காட்டியது தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல்

அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம்; மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது – பாஜக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கண் முன்னே விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு கண் முன்னே இருக்கும் ஒரே பிரச்சினை ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்துவது … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம்: புதிய வீடியோவில் உள்ளவர்கள் விசாரணை நடத்தும் அதிகாரிகள்தான்

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் தொடர்பாக வெளியான இரண்டு புதிய வீடியோக்களில் உள்ளவர்கள் மர்ம நபர்கள் அல்ல, விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவர்கள் என கொல்கத்தா போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். மேற்குவங்கம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அரங்கில்எடுக்கப்பட்ட 2 புதிய வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்புவெளிவந்தன. அதில் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்பில்லாத பலர் உள்ளனர். சிவப்புசட்டை அணிந்த நபர், உத்தரவுகள் பிறப்பிக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்துக்கு தொடர்பில்லாத … Read more

கடித நாள் – கவிதை

கடித நாள் (செப்டம்பர் 1) முகவரிகளை தொலைத்த பின், முகங்களை மறந்த பின் ஏது கடிதம்? கூடி வாழும் வாழ்க்கை கூடு வாழ்க்கையான பின்னே ஏது உறவு? அன்புள்ள உறவுகளை எழுத்தால் இணைத்த உறவு சங்கிலி எங்கோ பிரிந்து சென்ற மாயமென்ன? சுற்றத்தின் நலத்தை கட்டுகளின் குவியலுள் தேடும் காலம் எங்கோ காணாமல் சென்றதேன்? எழுத்தாணி முனை அவதானித்த வாழ்வியல் காலம்,, எப்போதோ படித்த இலக்கியத்தின் இறுதி பக்கமாய் முடிவுற்றது ஏனோ? வேளையிலும், வேலையிலும் வரவிலும்,செலவிலும் உடன் … Read more