ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம்!

சென்னை: ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம் என தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சைபர் தாக்குதல்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், https://cybercrime.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் … Read more

ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் ஜாம்பவான்! இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை!

Dwayne Bravo announces retirement: மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 2024 சீசனுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 40 வயதான பிராவோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ. மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரராக இருந்த பிராவோ, … Read more

திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வந்தால் தேவையான அளவு லட்டு

திருப்பதி திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வருவோருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தேவையான அளவு லட்டுகள் வழங்கப்பட உள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு பிரசாதத்தை ஆதார் அட்டையை காட்டி ஒரு அட்டைக்கு 2 லட்டு வீதம் மட்டுமே கொடுக்கப்படும் என செய்திகல் வெளியானது.   இது தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குவோருக்கு மட்டும் என்பது புரியாததால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. நேற்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், … Read more

வெள்ளி தட்டில் கொக்கைனா?.. கமல் பற்றி சுசித்ரா சொல்றது நம்புற மாதிரியா இருக்கு?.. கஸ்தூரி ஓபன் டாக்

சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். முக்கியமாக கமல் ஹாசன் குறித்தும் ஒரு விஷயத்தை பேசி பரபரப்பை பற்ற வைத்தார். அது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச்

செப். 14-ம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 14-ல் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிகவின் 20-ம் ஆண்டு தொடக்க தினம் செப்டம்பர் 14-ம் தேதிவருகிறது. அந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும். அதன்படி, பத்மபூஷண் விருதுக்காக தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, கட்சியின் 20-ம் ஆண்டுதுவக்க விழா, விஜயகாந்தின் … Read more

பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் தன்னுடைய இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்: ஐ.நா. முன்னாள் தலைவர் கருத்து

புதுடெல்லி: ஐநா அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும் ஐநா முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி தெரிவித்துள்ளார். கிஷோர் மஹ்பூனி ஐநாவுக்கான சிங்கப்பூரின் முன்னாள் பிரதிநிதியாகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் வழங்குவது குறித்து அவர் கூறுகையில், “இன்று அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு உலகின் அதிகாரமிக்க நாடாக இந்தியா உள்ளது. பிரிட்டன் தன்ஆதிக்கத்தை இழந்துள்ளது. தவிர, ஐநா … Read more

எண்ணெய் சுத்திகரிப்பு, மின் உற்பத்தி நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் படை ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்து கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவின் தரப்பு தகுந்த எதிர்வினையாற்றி வருகிறது. இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டு ட்ரோன்கள் உட்பட 15 பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 158 ட்ரோன்களை … Read more

நடிகர் விஜய்: என்னது சாப்பாடு சாப்பிட்டா கோட் டிக்கெட் ஃப்ரீயா.. என்னமா அலப்பறைய கொட்டுறாங்க!

மதுரை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் அப்பா -மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள நிலையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த சுவாரசியங்களை படத்தின் கிரியேட்டில் தயாரிப்பாளர் அர்ச்சனா

2026 தேர்தலில் அதிமுக ஒருங்கிணைந்து ஆட்சியமைக்கும்: ஓபிஎஸ் நம்பிக்கை

தென்காசி: வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக … Read more