ஆபாச மெசேஜ்… வகுப்பு எடுக்கும் போதும் வக்கிரம்… வால்பாறை கல்லூரியில் அத்துமீறிய பேராசிரியர்கள்!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மீது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. வால்பாறை அதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.  கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த கல்லூரிக்கு, ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது கல்லூரி மாணவிகளுக்கு நிகழும் பிரச்னை குறித்து … Read more

கோவில்பட்டியில் மர தடி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குச்சி கம்பெனியில் மர தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (55). இவர் தனியார் குச்சி கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று (சனிக்கிழமை) கம்பெனியில் மாசிலாமணி பணியில் இருந்தார். அப்போது குச்சி தயாரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத் தடி ஒன்று திடீரென உருண்டு அவர் மீது விழுந்தது. … Read more

கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து @ விஜயவாடா

ஹைதராபாத்: கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ரயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது ரயில்வே துறை. சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விஜயவாடா மூத்த … Read more

“பிணைக்கைதிகளை கொலை செய்பவர்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஜெருசலேம்: காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தக் கொலைகள் ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்பதையே நிரூபிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பிணைக்கைதிகள் இறப்பு செய்தியைக் கேட்டு தனது இதயமே நொறுங்கிப்போனதாக தெரிவித்தார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “ஹமாஸ் அவர்களை (பிணைக்கைதிகள்) உறையவைத்து கொலை செய்துள்ளது. இதற்காக இஸ்ரேல் ஹமாஸ்களை கட்டாயம் பொறுப்பேற்க வைக்கும். அவர்கள் போர்நிறுத்த பேச்சுவார்த்தையை முறியடிக்கின்றனர். பிணைக் கைதிகளை கொலை … Read more

சித்தார்த்-அதிதி ராவ்வின் திருமணம் எங்கே? எப்போது? முழு விவரம்..

Latest News Siddharth Aditi Rao Hydari Wedding : நடிகர் சித்தார்த்திற்கும் அதிதி ராவ்விற்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில், அவர்களின் திருமணம் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.   

தொடர் தோல்வி! பாபர் அசாமை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற பெரிய நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுமா? அல்லது வேறு இடத்திற்கும் மாற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் அல்லது இலங்கையில் நடத்தப்பட உள்ளதாவும் கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆசிய கோப்பையில் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா … Read more

கேரள நடிகைகள் பாலியல் சர்ச்சை : மம்முட்டி மவுனம் கலைப்பு

திருவனந்தபுரம் கேரள நடிகைகள் பாலியல் புகார் சர்ச்சை குறித்து இதுவரை மவுனமாக இருந்த நடிகர் மம்முட்டி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. பல நடிகைகள்,இந்த அறிக்கையை தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்களை தெரிவித்தனர். மூத்த நடிகர்களான மும்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு … Read more

30 நிமிடத்தில் மொத்தமும் காலி.. பாகிஸ்தானில் மால் திறந்தவருக்கு நேர்ந்த கதி.. இப்படியா திருடுவாங்க?

       இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் புதிதாக மால் திறக்கப்பட்ட நிலையில் அடுத்த 30 நிமிடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனைத்து பொருட்களையும் திருடிச்சென்றனர். இதனால் புதிதாக திறக்கப்பட்ட மால் வெறும் 30 நிமிடங்களில் மொத்தமாக காலியானது. பாகிஸ்தானில் உள்ள முக்கியமான நகரங்களில் கராச்சியும் ஒன்று.  இங்கு அதிகமான மக்கள் Source Link

அடேங்கப்பா ஷாருக்கான் சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய்.. திரைத்துறையில் முதலிடம் அவருக்குதான்

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அவரது சொத்து மதிப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி திரைத்துறையினரை ஆச்சரியத்தில்

இறுதிவரை நிறைவேறாமல் போன சினிமா ஆசை; மனதை கனமாக்கும் `பீம்சிங் ஸ்டூடியோ' செங்கேணியின் கதை | பார்ட் 2

‘ஜெய்பீம்’ படம் வெளியான தருணத்தில், “நானும் இந்நேரம் நடிகனாகியிருப்பேன்!” – இது `பீம்சிங்’ ஸ்டூடியோ செங்கேணியின் கதை!’ என்கிற தலைப்பில் விகடன் தளத்தில் வெளியாகியிருந்தது ஒரு கட்டுரை. சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள அரசு உதவி பெறும் சிங்காரம் பிள்ளை ஆரம்பப் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த மணியின் கதை அது. மணியின் இயற்பெயர் ‘ஜெய்பீம்’ கதை நாயகியின் கேரக்டர் பெயரான செங்கேணி. தன்னுடைய பதின்ம வயதுகளில் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் நியூட்டன் ஸ்டூடியோவில் ‘செங்கேணி’யாக … Read more