டெல்லி ஜும்மா மசூதி தொடர்பாக மன்மோகன் கையெழுத்திட்ட கோப்பு எங்கே? – ஏஎஸ்ஐ அதிகாரிகளிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜும்மா மசூதி உள்ளது. அதனை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் அதனைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், “ஜும்மா மசூதி, மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னம் இல்லை. எனவே அது ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த 2004-ல் ஜும்மா மசூதியை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற … Read more