அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனை செதுக்கிய கமல்.. மேடையில் அனைவரையும் வியக்க வைத்த எஸ்கே!

சென்னை: மாவீரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படம் அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கமல் போல பேசி ரசிகர்களை மகிழ்வித்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள

“செந்தில் பாலாஜியை தியாகி என ஸ்டாலின் சொல்வது வெட்கக்கேடானது” – எடப்பாடி பழனிசாமி

சேலம்: ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதல்வர் சொல்வது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புறநகர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள், ஒன்றியம், நகர, பேரூர் மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த … Read more

கர்நாடகாவில் நில முறைகேடு விவகாரம்: முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீஸார் நில முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லோக் ஆயுக்தா முடிவெடுத்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே … Read more

நான் முதல்வன் திட்டத்தில் இணந்த ஸ்டெல்லண்டிஸ்

சென்னை தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெல்லண்டிஸ் இணைந்துள்ளது. தமிழக அரசின் ’நான் முதல்வன்’ திட்டம் திறன் மேம்பாட்டு நிலப்பரப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சிஆகும்.  தற்போது இந்த திட்டத்தில் ஆட்டோமோட்டிவ் மற்றும் மொபிலிட்டி துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் இணைந்துள்ளது. இக்கூட்டணி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொழில்துறை தொடர்பான திறன்களுடன், குறிப்பாக வாகனத் துறையில், வளரும் வேலை சந்தைக்கு  அவர்களை சிறப்பாக தயார்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது. இந்தக் … Read more

Ajithkumar: சுச்சி லீக்ஸ் பிரச்னைக்குப் பின்னர் அஜித் மட்டும்தான் ஃபோன் பண்ணி பேசுனாரு – சுசித்ரா!

சென்னை: தமிழ் சினிமாவில் கிசு கிசு பேசுபவர்கள் பலர் இருந்தாலும், கிசுகிசு பேசுவேன், என்னால் கிசுசிசு பேசாமல் இருக்க முடியாது என தான் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாகவே கூறியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவர் தனது யூட்யூப் சேனலில் எது பேசினாலும் அது சர்ச்சையாகத்தான் இருக்கும். இவர் பேசும் விஷயங்களை நம்பலாமா வேண்டாமா என

Udhayanidhi Stalin: 'அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்' – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்

‘தி.மு.க’ 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இப்போது துணை முதலமைச்சர் என கடகடவென கழகத்தில் வளர்ந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 2019-ம் ஆண்டு தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று சட்டமன்றத்திற்குச் சென்றார். அந்தச் சமயத்தில் ‘அமைச்சர் பதவி கிடைக்குமா?’ என்ற கேள்விகள் எழ, ‘முதல்வர்தான் அதை முடிவு செய்வார்’ எனச் சொல்லி நகர்ந்தார். பிறகு, … Read more

வங்கியில் முறைகேடாக கடன் பெற்றதாக அதிமுக முன்னாள் எம்.பி.க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

சென்னை: வங்கியில் முறைகேடாக கடன் பெற்றதாக அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-19 காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பியாக பதவி வகித்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர் தனியார் அறக்கட்டளை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் வங்கியில் கடன் கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அப்போது வங்கி மேலாளராக பணியாற்றிய தியாகராஜன், தானும் தனது குடும்பத்தாரும் … Read more

திருப்பதி லட்டு தயாரிப்புக்கும் ஆந்திர அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை: ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானமே பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்பதி கோயிலுக்கு நான் செல்லக் கூடாது என்பதற்கான முயற்சிகளை ஆந்திரப் பிரதேச அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோருக்கு ஆந்திர அரசு … Read more

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு; ராஜினாமா செய்ய கோரும் சித்தராமையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி வழக்க் பதியப்பட்டுள்ளதால் அவரை ராஜினாமா செய்ய சித்தராமையா கோரி உள்ளார். மத்திய அரசு கடந்த 20218ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனா உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது எனதெரிவித்தது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

துப்பாக்கியை கையில் எடுக்கும் காவல்துறை.. என்கவுண்டர் குறித்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு தளங்களில் தமிழில் பயணம் செய்து வருபவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் தற்போது ஹிட்லர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் முன்னதாக விஜய் ஆண்டனி அதிகமாக ஈடுபட்டிருந்தார். இந்த