IPL 2025: '6 வீரர்களை ரீட்டெய்ன் செய்யலாம்; CSK க்கு சாதகமான விதி?'- பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. IPL 2024 வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பிசிசிஐ எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல் இன் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் சில விதிமுறைகள் பற்றி இறுதிக்கட்டமாக ஆலோசித்து பிசிசிஐ இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள், 1. ஒவ்வொரு அணியும் … Read more

“சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களுமே முக்கிய காரணம்” – நீதிபதி டி.கிருஷ்ணகுமார்

சென்னை: சமூக மாற்றங்களுக்கு வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் முக்கிய காரணம் என பட்டரைப்பெரும்புதூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியி்ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீ்திபதி டி.கிருஷ்ணகுமார் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பங்கேற்று சட்ட மாணவ, மாணவியருக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி … Read more

பிஹாருக்கு கனமழை, வெள்ள அபாய எச்சரிக்கை: மாவட்டங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

பாட்னா: இந்திய வானிலை ஆய்வு மையம் பிஹாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஹாரின் மேற்கு மற்றும் கிழக்கு சம்பரான், சீதாமர்ஹி, ஷீயோகர், முசாபர்பூர், கோபல்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, பாட்னா, மதுபான மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது … Read more

மகாராஷ்டிர அரசு மீது தேர்தல் ஆணையம் அதிருப்தி

மும்பை தேர்தல் ஆணைஅம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் சொந்த மாவட்டங்களில் பதவி வகிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தயாராகி வருகிறது. எனவே தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆயினும் இந்த உத்தரவை அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. முழுமையாக அமல்படுத்த தவறியுள்ளனர். இதையொட்டி தேர்தல் ஆணையம் தனது அதிருப்தியை தெரிவித்த்துடன் ம் … Read more

Sri diviya Salary: ரீ என்ட்ரியா ஸ்ரீதிவ்யா.. மெய்யழகன் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானத் திரைப்படம் மெய்யழகன். மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று இந்த செய்தியில் பார்க்கலாம். த்ரிஷா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கி அனைவரையும், காதலே

சீனா ஓபன் டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜிரி லெஹெக்கா (செக்), ராபர்டோ பாட்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) உடன் மோதினார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த ஜிரி லெஹெக்கா, அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். லெஹெக்கா இந்த ஆட்டத்தில் 3-6, 6-2 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி … Read more

செல்ல நாய் தகனத்தில் விபரீதம்: கி.மீ. கணக்கில் பரவிய காட்டுத்தீ; ரூ.1.67 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

நியூயார்க், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் மேற்கே கடந்த மாதம் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவி பலத்த பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. 11 சதுர மைல்கள் (28 சதுர கி.மீ.) பரப்பளவுக்கு தீ பரவியதில் மரங்கள் எரிந்து போய் விட்டன. வனவாழ் விலங்குகளும், பறவைகளும் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் ரூ.1.67 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இந்த காட்டுத்தீ தற்போது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், … Read more

Udhayanidhi: `அமைச்சரான 655 நாள்களில் துணை முதல்வர்!' – நடிகர் டு துணை முதல்வர் டைம்லைன் பார்வை

விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். காலக்கோடு வழியாக உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதையைப் பற்றி இங்கே. மே 3, 2008 – ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உதயநிதி முதல் முதலாக தயாரித்த ‘குருவி’ படம் வெளியானது அக்டோபர் 17, 2009 – ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் கௌரவ … Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் – தமிழக அமைச்சரவை மாற்றம் விவரம்

சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்கவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை சனிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியான தகவல்கள்: தமிழக அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். குறிப்பாக, … Read more

“வேலையில்லா திண்டாட்டமே மிகப் பெரிய பிரச்சினை!” – மோடிக்கு கேள்விகளை அடுக்கிய கார்கே

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டத்தை விட நாட்டில் மிகப் பெரிய பிரச்சினை எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தோற்கடிப்பார்கள் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “வேலையில்லா திண்டாட்டத்தை விட மிகப் பெரிய பிரச்சினை நாட்டில் இல்லை. … Read more