இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம்: யார் இந்த ஹசன் நஸ்ரல்லா?

புதுடெல்லி: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட 32 ஆண்டு காலமாக இயக்கத்தை வழிநடத்திய சக்திவாய்ந்த தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் இழப்பு, ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தத் தகவல் அறிந்து, லெபனான் முழுவதும் மக்கள் கதறி அழுதவண்ணம் உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்குப் பகுதி … Read more

மழையால் இந்திய அணிக்கு தலைவலி… பறிபோகும் WTC பைனல் வாய்ப்பு? – என்ன விஷயம்?

India National Cricket Team: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி (India vs Bangladesh 2nd Test) நேற்று (செப். 27) உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். மழை காரணமாக போட்டி நேற்று தாமதமாக தொடங்கியது. சுமார் 35 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வங்கதேசம் 3 … Read more

துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது : மூத்த பத்திரிகையாளர் 

சென்னை தமிழக துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது என மூத்த பத்திரிகையாளர் எஸ் பி, லட்சுமணன் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்றும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கடந்த இரண்டு மாதங்களாகவே செய்திகள் கசிந்து வருகின்றன. ஒவ்வொரு முறை செய்தி வேகமாக பரவும் போதும், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார். மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது … Read more

Serial Actor Arnav: நிம்மதியான சாவு வந்தா போதும்.. மனம் நொந்து பேசிய சீரியல் நடிகர் அர்னவ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியல் செல்லம்மா. இதில், அர்னவ் – அன்ஷிதா கதாநாயகர்களாக நடித்து வந்தனர்.இந்த சீரியல் தற்போது முடிந்துள்ள நிலையில், யூடியூப் ஒன்று பேட்டி அளித்துள்ள அர்னவ் பல விஷயத்தை மனம் திறந்து பேசினார். அதில், நான் சீரியலுக்கு வருவதற்கு முன் பவுன்சராக இருந்தேன்.அப்போது, என் நண்பன் ஒருவர் நீ

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஐகோர்ட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் மணீஷ் குமார் சைனி. சில மாதங்களாக இவருக்கு சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஐகோர்ட்டு வளாகத்தில் அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் கோர்ட்டு வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐகோர்ட்டுக்கு வெளியே சாலைகளை மறித்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடைய சகோதரர் ரவீஷ் சைனி கூறும்போது, கிளார்க் … Read more

இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: 3-வது நாளும் மழை குறுக்கிட வாய்ப்பா..? வெளியான தகவல்

கான்பூர், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு … Read more

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

காத்மாண்டு, நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இதில், காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் 5 பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் 3 பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் … Read more

புதிய அமைச்சுகளின் விடயப்பரப்பு மற்றும் நிறுவனங்கள் வர்த்தமானியில் வௌியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று (27) வௌியிடப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 44 உறுப்புரையின் (1) இலக்க உப பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது.    

திமுக பவள விழா: "தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கல்லைக் கூட…" – கமல் ஹாசன் அனுப்பிய வாழ்த்துரை

தி.மு.க.வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. பவள விழா இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு … Read more

இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடல் அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி

கோவை: வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமான கோவையைச் சேர்ந்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான இயற்கை விவசாயி பாப்பம்மாளின் உடல் இன்று (செப்.28) அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், மத்திய இணையமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இயற்கை விவசாயத்தில் இவர் ஆற்றி வரும் … Read more