சென்னை: ரயில்வே டி.டி.ஆர்., வேலைக்கு ரூ. 10 லட்சம் லஞ்சம்; மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டட வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அதே கோயிலுக்கு ஆவடி வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரும் வந்திருக்கிறார். அதனால் ராமகிருஷ்ணனும் விஜய்யும் பழகி வந்திருக்கிறார்கள். தன்னைக் கல்லூரி பேராசிரியர் என ராமகிருஷ்ணனிடம் விஜய் கூறியிருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய சகோதரியின் மகன் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சிரமப்படுவதாக விஜய்யிடம் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். Indian Railways அதைக் கேட்ட விஜய், … Read more

சிறைக் கைதிகளை வழக்கறிஞர்கள் நேரடியாக சந்தித்துப் பேச எந்த தடையும் கூடாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: புழல் சிறையில் கைதிகள் தங்களது வழக்கறிஞர்களுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே பேச வேண்டும் என விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதுபோல எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என சிறைத் துறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஆனந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு கைதியை … Read more

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நவ.26-க்கு முன் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம்

மும்பை: மகாராஷ்டிராவின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியோடு முடிவடைவதால் மாநில தேர்தல் அதற்கு முன்பாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று (செப். 28) நடைபெற்றது. இதனையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை நவம்பர் 26-க்கு முன் … Read more

டிஜிட்டல் டைரி – 13: புதிதாக வந்தாச்சு ‘ஏஐ’ தேடு பொறி!

இணைய உலகின் மிகப்பெரிய தேடு பொறி எது என்பதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது, ‘கூகுள்’. சரி, இரண்டாவது பெரிய தேடு பொறி எது எனத் தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஏனெனில், கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் தேடு பொறியாக இருப்பது ‘யூடியூப்’ என்று சொல்லப்படுகிறது. மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ அல்லது தனியுரிமை காக்கும் ‘டக்டக்கோ’ போன்றவற்றைப் பின்னுக்குத்தள்ளி ‘யூடியூப்’ இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. அதே நேரம், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், … Read more

பிரியங்கா மோகனை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! காரணம் என்ன?

Priyanka Mohan Troll : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், பிரியங்கா மோகன். இவர், தற்போது நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கி இருக்கிறார்.   

Amaran: "நான் தொகுத்து வழங்க; ராஜ்குமார் இயக்க; சாய் பல்லவி பங்கேற்ற டிவி ஷோ…" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். நெல்சன் விஜய் தொலைக்காட்சியிலிருந்த போது அவருடன் அங்கு பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அமரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற உண்மை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய … Read more

ரூ. 176 லட்சம் கோடியாக அதிகரித்த மத்திய அரசின் கடன் தொகை

டெல்லி ரூ. 176 லட்சம் கோடியாக மத்திய அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கடன்தொகை 2024 – 2025 ஜூன் காலாண்டின் இறுதியில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மத்திய அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்தது தற்போது 25 சதவீதம் உயா்ந்துள்ளது. மத்திய அரசின் மொத்த கடனில் ரூ.9.78 லட்சம் கோடி வெளிநாட்டு கடன் மதிப்பாகும். இந்த தொகை கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.50 லட்சம் … Read more

சீனாவில் மழை போல் கொட்டிய \"மனித மலம்..\" தெறித்து ஓடிய மக்கள்.. அச்சச்சோ! கனவில் கூட நடக்காத சம்பவம்

பீஜிங்: யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்காத முடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. கழிவு நீர் குழாய் வெடித்து சிதறியதில் மனித மலம் மழை போல மக்கள் மீது கொட்டியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது. அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம் Source Link

இவர் நோ கமெண்ட்ஸ் சொன்னா மட்டும்.. இன்னைக்கு ப்ளூ சட்டை மாறனின் டார்கெட் ரஜினிகாந்த்!

சென்னை: ஆந்திராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது திருப்பதி லட்டு விவகாரம். இந்த விஷயத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த விஷயத்தில் முன்னதாக நடிகர் கார்த்தி பேசியது குறித்து பவண் கல்யாண் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து இதுகுறித்து நடிகர் கார்த்தி மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அதிகாம் கிராமத்தில் தேவ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் போக்குவரத்து கூடுதல் எஸ்.பி. மும்தாஜ் அலி படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more