கணவரை தொடர்ந்து தலைமைச் செயலரான மனைவி: கேரள சுவாரஸ்யம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியான சாரதா முரளிதரன், தனது கணவர் வேணுவைத் தொடர்ந்து தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் கேரள தலைமைச் செயலராக இருந்த வேணுவின் பணி காலம் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து அந்தப் பொறுப்பை அவரது மனைவி சாரதா முரளிதரன் ஏற்றுக் கொண்டார். கடந்த மாதம் இது குறித்த தகவலை கேரள அரசு வெளியிட்டது. இதற்கு முன்பு திட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் கூடுதல் தலைமைச் செயலராக … Read more

மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு நடவடிக்கை

சென்னை கொல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  இதையொட்டி நாடெங்கும் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல இடங்களில் அவசர சிகிச்சை தவிர மற்றவை கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய அரசு இதில் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் … Read more

உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழக வீராங்கனைகள்.. பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள்! குவியும் பாராட்டு

சென்னை: பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி முருகேசன் வெள்ளியும் மனிஷா வெண்கல பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், Source Link

கூலி படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா? அட்டகாசமாக வெளியான அப்டேட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த, அட்டகாசமான அறிவிப்பை  படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக அந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு அறிவித்து வருகின்றது ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ள வேட்டையன் படத்தில், ரஜினியுடன்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு: வீட்டு உபயோக மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் நடைமுறையில் இருக்கும். விவசாய மின்சாரம் இலவசமாக தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2024-25 ஆம் … Read more

‘சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது’ – ஆர்எஸ்எஸ் கருத்து

பாலக்காடு: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் கருத்து தெரிவித்துள்ளது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் கேரளாவின் பாலக்காட்டில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை 3 நாட்கள் நடைபெற்றது. 3-ம் நாள் நிகழ்ச்சியின் நிறைவில் அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை … Read more

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்துவுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட … Read more

\"பழனியில் நடந்தது இந்து விரோத மாநாடு.. உதயநிதி ஒரு சனாதன விரோதி..\" பாஜகவின் ஹெச். ராஜா சரமாரி தாக்கு

கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச் ராஜா, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பழனியில் நடந்தது முருகன் மாநாடே இல்லை என்று விமர்சித்த அவர், முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இந்து விரோத மாநாடு என்றும் சரமாரியாக விமர்சித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாவட்டம் Source Link

இந்துவுக்கு தெரியவந்த உண்மை.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வேலு சுடரை உயிரோடு புதைக்க எழில் அவளை தேடி கண்டுபிடித்து அவளை வெளியே கொண்டு வருகிறான். ஆனால் சுடர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்க எழில் முதலுதவி கொடுத்தும் எந்த

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (02.09.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.  இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி … Read more