அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி), பிரண்டன் நகாஷிமா (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரெவ் , அடுத்த 3 செட்டுகளை எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஸ்வரெவ் இந்த ஆட்டத்தில் 3-6, 6-1, 6-2 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். … Read more

மேற்கு கரையில் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் போலீசார் 3 பேர் பலி

ஜெருசலேம், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை … Read more

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் செல்லுபடியான அடையாள அட்டைகள்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் அதற்குரிய செல்லுபடியான அடையாள அட்டைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை….

Dhoni: "தோனி செய்ததெல்லாம் இப்போது வெளிவருகின்றன!" – கபில் தேவையும் சாடிய யுவராஜ் சிங் தந்தை

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த கேப்டன்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் தவிர்க்க முடியாத பெயராக மகேந்திர சிங் தோனி என்ற பெயர் இடம்பெற்றிருக்கும். அதேபோல், சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாகவும் தன்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கியிருக்கிறார். முக்கியமாக இவரின் தலைமையில், சக வீரர்களின் பங்களிப்போடு டி20 உலக கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்று ICC கோப்பைகளை வென்றிருக்கிறது இந்திய அணி. … Read more

தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க தொழில் நிறுவனங்களை தூண்ட வேண்டும்: இந்திய வம்சாவளியினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் என்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு பறை இசை மற்றும் திருக்குறள் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்பேசியதாவது: உலகின் 3-வதுபெரிய … Read more

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்களை கைது செய்ய கேரள போலீஸார் தீவிரம்

திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கேரள போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். மலையாள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. நடிகைகளிடம் விசாரணை நடத்திய இந்த கமிட்டி, தனது அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்தது. சில ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த அறிக்கை, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் சமீபத்தில் … Read more

கங்கனா ரணாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்… சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் எமர்ஜென்சி படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தை செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். தணிக்கை வாரியத்திடம் இருந்து படத்திற்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கங்கனா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படம் தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று … Read more

ஓவர் தலையீடு?.. மாசு பட தோல்விக்கு சூர்யா காரணமா?.. வெங்கட் பிரபு பேச்சால் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இப்போது விஜய்யை வைத்து அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் வெங்கட் பிரபு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி கொடுத்த ஒரு பேட்டியில் அவர் பேசிய விஷயம் புதிய

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது

அகர்தலா, வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வங்காளதேசத்தின் எல்லையையொட்டி … Read more

வங்காளதேசம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

டாக்கா, வங்காளதேச தலைநகர் டாக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன் அஷனுல் ஹகி நேற்று சாலைவிபத்தில் படுகாயமடைந்தார். அவர் டாக்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அஷனுல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சிகிச்சை அளித்ததில் டாக்டர்கள் அலட்சியம் காட்டியதாலேயே மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், ஆத்திரத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்களை உறவினர்கள் தாக்கினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட … Read more