ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜகவுக்கு காத்திருக்கும் நெருக்கடி.. பழங்குடியினர் வாக்குகளை அள்ளுமா?

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜகவுக்கு பழங்குடி மக்களின் வாக்குகளை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சமீப நாட்காளாக ஜார்க்கண்ட் தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதிலிருந்து, அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், Source Link

அனைவருக்கும் நன்றி சொன்ன மணிமேகலை.. அம்மணி எங்க போயிருக்காங்க தெரியுமா?

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி வழக்கமான சுவாரஸ்யங்களுடன்தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்த ஷோ, டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னை குக்காக செயல்பட்டுவரும் மற்றொரு ஆங்கர் சிறப்பாக செயல்பட விடவில்லை என்று குற்றம்சாட்டி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அவரால்

  அனர்த்த இடையூறுகளை முகாமை செய்வதற்காக விசேட  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

  இன்று (19) முதல் 22 ஆம் திகதி வரை விசேட தேர்தல் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவு அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை வழங்கியுள்ளது.   இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலையை இக் காலகட்டத்தில் புறக்கணிக்க முடியாது என்றும் இதன் போது அனர்த்தங்களால் தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை முகாமைத்துவம் செய்வதற்காக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இணைந்து விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் … Read more

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மீன் எண்ணெய்,விலங்குக் கொழுப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதில் திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர்) இருந்தபோது திருமலையின் புனிதத்தைக் … Read more

கல்வராயன் மலை மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு வழங்க 3 மாதம் அவகாசம் ஏன்? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை வழங்க 3 மாதம் அவகாசம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தங்களது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மேம்பாடு தொடர்பாக … Read more

செப்.21 முதல் 23 வரை: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதி செய்தது வெளியுறவுத் துறை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 முதல் 23 வரை அரசு முறை பயணமாக அமெரிக்காவில் இருப்பார் என வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவில் இருப்பார். ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டுக்காக நியூயார்க் செல்வதற்கு முன், குவாட் உச்சி மாநாட்டுக்காக … Read more

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம்: இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணிப்பு 

புது டெல்லி: பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் ஓராண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர கோரும் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன. இருப்பினும் 124 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மேலும் கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் இந்த தாக்குதல் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்திய போதிலும், இஸ்ரேல் தாக்குதலை கைவிடவில்லை. இஸ்ரேல் … Read more

ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..

Thalaivettiyaan Paalayam Series : பிரைம் வீடியோவிலிருந்து வெளியான தலைவெட்டியான் பாளையம் சீரிஸின் அருமையான டிரெய்லரைத் தொடர்ந்து, இந்த சீரிஸ் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Nayanthara: `இவரின் முதலீடு எங்களின் மைல்கல்!'; நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்த பிசினஸ் பக்கம்!

சினிமா நட்சத்திரங்கள் பலரும் தற்போது அவர்களின் சினிமாவை தாண்டி பிசினஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்கள். சிலர் இது போன்ற பிசினஸ் தொடங்குவதை சினிமாவை தாண்டி ஒரு லட்சியமாகவும் கருதி செய்து வருகிறார்கள். அந்த வகையில் சூரி மதுரையில் சொந்தமாக ஹோட்டல் வைத்திருக்கிறார். இவரை தொடர்ந்து நடிகர் ஆரியாவும் சென்னையில் ஹோட்டல் வைத்திருக்கிறார். பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் உணவக பிசினஸை நடத்தி வருகிறார்கள். இது போக ஆடை பிசினஸையும் சில சினிமா நட்சத்திரங்கள் செய்து வருகிறார்கள். இயக்குநர் … Read more

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் வினா

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏன் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என வினா எழுப்பி உள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்றும், ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட … Read more