திருப்பதி தெப்பக்குளம் மீண்டும் திறப்பு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் இன்றுமுதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோயில் அருகே உள்ள தெப்பக்குளம் சீரமைக்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் சீரமைப்பு பணிகளுக்காக தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்ககடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலத்துக்கு தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் … Read more