மும்பை | சிவாஜி சிலை இடிந்ததைக் கண்டித்து மகா விகாஸ் அகாதி போராட்டம்: மாநிலத்துக்கான அவமதிப்பு என தாக்கரே சாடல்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சத்திரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேரணி நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க ஹுதாத்மா சவுக்கில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரை சென்ற பேரணியில் எதிர்க்கட்சித் தொண்டர்கள் அரசைக் கண்டித்து கைகளில் காலணிகளுடன் சென்றனர். சிலை உடைந்ததற்கு மத்திய மாநில அரசுகளை எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “பிரதமர் மன்னிப்பு கேட்டது … Read more