குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை – மருத்துவர் மீது வழக்குப்பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிபெற வந்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிவரும் பாபு என்பவர் நேற்று முன்தினம் மருத்துவமனையின் ஓர் அறையில் தனியாக இருந்த நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவரின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடிவந்த மாணவி, மருத்துவமனை ஊழியர்களிடம், இதுபற்றி கூறினார். மருத்துவர் பாபு உடனடியாக, தனது பெற்றோரையும் தொடர்புகொண்டு மருத்துவரின் … Read more

வட சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வட சென்னையில் நடைபெறும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேரில் ஆய்வு செய்தார். எழும்பூரில் காந்தி இர்வின் பாலம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை இணையுமிடத்தில் ரயில்வே பாதையின் அருகில் ரூ.5.20 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணுகு கால்வாய் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர், பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைத் … Read more

ஆர்எஸ்எஸ் 3 நாள் மாநாடு கேரள மாநிலத்தில் தொடக்கம்: சமூக சீர்திருத்தம், வங்கதேச விவகாரம் குறித்து ஆலோசனை

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள்மாநாடு கேரளாவில் நேற்று தொடங்கியது. இதில் சமூக சீர்திருத்தம், வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம் கேரள மாநிலம் பாலக்காடு நகரில் நேற்று தொடங்கியது. தேசிய அளவிலான வருடாந்திர கூட்டம் கேரளாவில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய 32 அமைப்புகளைச் சேர்ந்த 320 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் … Read more

‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி திரைப்படம் – ஏன் பார்க்க வேண்டும் தெரியுமா?

ZEE5 இல் “மனோரதங்கள்” எனும் அற்புதமான காவியத்தை நீங்கள் தவறவிட்டுவிடாமல் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

இன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயத்தப்படுகிறது. ஏற்கெனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கிறது. அதன்படி தற்போது வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று முதல் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் … Read more

செங்கல்பட்டுக்கு சூப்பர் செய்தி.. ஓமியம் நிறுவனத்தில் ரூ.400 கோடி முதலீட்டை கொத்தி தூக்கிய ஸ்டாலின்!

சான்பிரான்சிஸ்கோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், Source Link

ஆபாச படத்தில் நடித்தேன்.. நினைத்திருந்தால் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.. ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர் ஸ்வர்ணமால்யா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவருக்கு அலைபாயுதே படம் சினிமாவுக்கான கதவை திறந்து வைத்தது. அதில் ஷாலினிக்கு அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இந்தச் சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்

விவசாயிகள் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு

சண்டிகர், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையேயான ஷம்பு எல்லையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ந் தேதி முதல் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நேற்று 200-வது நாளை எட்டியது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது … Read more

இந்திய அணியில் புஜாரா, ரகானே இடங்களை அந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் – தினேஷ் கார்த்திக்

லாகூர், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் … Read more

ரஷ்யாவில் 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

மாஸ்கோ, ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ரஷ்யாவின் தொலை தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான ஹெலிகாப்டர் மி -8 ரகத்தை சேர்ந்தது ஆகும். 2 என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பரவலாக இந்த ரக ஹெலிகாப்டரே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயமான இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்பு … Read more