நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் அவ்வப்போது மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more

`பதவி கிடைக்காத ஆதங்கத்தில் அப்படிப் பேசுகிறார்' – விஜயதரணி குற்றச்சாட்டு குறித்து ராஜேஷ்குமார்!

“பா.ஜ.க-வுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் பதவி வரவில்லை” என அக்கட்சி தலைவர்கள் முன்னிலையிலேயே பேசி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி. அதுமட்டுமல்லாது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தன்னை `அவதூறான’ வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்ததாகவும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஆவேசமாகியிருந்தார் அவர். இது பற்றி விஜயதரணி கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸும், ராஜேஷ்குமாரும் என்ன அவதூறான வார்த்தையில் தேர்தல் சமயத்திலும், சமீபத்திலும் விமர்சித்திருந்தனர். அவர்கள் பேசிய வார்த்தை, பெண் … Read more

திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா: ஜெகத்ரட்சகனுக்கு ‘கலைஞர் விருது’ அறிவிப்பு

சென்னை: திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருது ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, … Read more

லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவற்றில் பல போலியானவை என இந்திய இளைஞர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு இந்த நாடுகளில் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவித்த 635 இந்தியர்களை மத்திய அரசு இதுவரை மீட்டு உள்ளது. இந்நிலையில் லாவோஸ் நாட்டின் பொக்கியோ … Read more

GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..

MS Dhoni Cameo In The GOAT Movie  : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இருப்பதை, அப்பட நடிகர் ஒருவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்.  

சாம்சங் முதல் ரெட்மீ வரை… 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்

ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.  இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள் பல குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் ஸ்மார்ட்போன் வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில்,  சுமார் ரூ.15,000 என்ற விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன. குறைந்த விலையில் … Read more

அரியானாவில் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்

டெல்லி தேர்தல் ஆணையம் அரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி உள்ளது அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதாவது அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் … Read more

பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா! கைதான 11 பேர் சொந்த ஜாமினில் விடுவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து நேற்று காலையிலே போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 11 மாணவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது. சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. Source Link

நடிகர் மைம் கோபியின் அம்மா உடல்நலக் குறைவால் காலமானார்.. இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தவர் மைம் கோபி. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்று கொடுத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் கண்ணும் கண்ணும் படம் மூலம் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-இன்று முதல் அமல்

சென்னை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், … Read more