என்கவுன்ட்டர்களுக்கு எதிராக ஐகோர்ட் காட்டம்: 2010 சம்பவத்தில் வெள்ளத்துரை மீது வழக்குப் பதிய உத்தரவு

மதுரை: மதுரையில் 2010-ல் நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், என்கவுன்ட்டர் சம்பவங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “என் மகன் முருகன் என்ற கல்லு மண்டையனை, கடந்த 16.2.2010-ல் மதுரை மாநகர காவல் துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை, … Read more

“நிலையான வளர்ச்சிக்கு உலகளாவிய அமைதியே ஆதாரம்” – ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: நவீன கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பன்முக ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ள குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், உலகளாவிய அமைதியே நிலையான வளர்ச்சிக்கான உத்தரவாதம் என்று குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான தொடக்க சர்வதேச ஈடுபாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், “உலகளாவிய அமைதியே நிலையான வளர்ச்சிக்கான உத்தரவாதம். புவிசார் அரசியல் கட்டமைப்புகளும் மோதல்களும் பாதுகாப்புக் … Read more

லெபனான் மிக மோசமான காலக்கட்டத்தை எதிர்கொள்கிறது: ஐ.நா கவலை

பெய்ரூட்: இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா உடனான போர் நிறுத்தத்துக்கான உலகளாவிய அழைப்புகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்நிலையில், லெபனான் ‘தலைமுறையில் மிக மோசமான காலக்கட்டத்தை’ எதிர்கொள்கிறது என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இம்ரான் ரிசா “நாடு பல தசாப்தங்களில் இல்லாத கொடூரமான போரை எதிர்கொள்கிறது. ஒரு … Read more

IND vs BAN: கான்பூர் டெஸ்ட்… 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதா – வானிலை ரிப்போர்ட் இதோ!

India National Cricket Team: இந்தியாவுக்கு வங்கதேசம் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் (India vs Bangladesh, Kanpur Test) இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் டாஸ் ஜெயித்து இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. 2015ஆம் ஆண்டில் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு … Read more

Petta Rap Review: டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு; ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு… ஆனா கதை?!

1992-ம் ஆண்டு சிறுவனாக இருக்கும் பாலசுப்பிரமணி, நடிகர் பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருக்கிறான். வளர வளர அவரைப் போலவே உடை, தோற்றம், நடனம், உடல்மொழி எனத் தன்னை மாற்றிக்கொள்கிறான் பாலசுப்பிரமணி. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது ஜானகி என்ற பெண், பாலசுப்பிரமணியை விரும்புகிறாள். ஆனால், பாலசுப்பிரமணி வேறு ஒரு பெண்ணை விரும்புவதால், அக்காதல் கைகூடாமல் போகிறது. மறுபுறம், பாலசுப்பிரமணியன் (இதுவும் பிரபு தேவாதான்… ஏதே?!) வளர்ந்து, கதாநாயகன் ஆகும் கனவோடு, கோடம்பாக்கத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். மறுபுறம், பிரபல பாடகியான … Read more

109 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 109. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அதற்காக மத்திய அரசு 2021ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. தனக்கு சொந்தமான நிலத்தில் தள்ளாத வயதிலும் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த பாப்பம்மாள் பாட்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை அவர் மரணமடைந்தார்.

சிவசக்தி திருவிளையாடல் தொடர்.. அரங்கேறும் சிவன் -பார்வதி திருமணம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: கலர்ஸ் தமிழ் சேனலில் அடுத்தடுத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலுக்கு டிஆர்பி-ஐ அதிகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் இந்த சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிவசக்தி திருவிளையாடல் என்ற ஆன்மீக புராண தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம்

டெஸ்ட் கிரிக்கெட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

கான்பூர், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை … Read more

அதிகரிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 700 -ஐ தாண்டியது

பெய்ரூட், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடுத்தது. இதனால் … Read more

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும்

ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஜப்பான் முழு ஆதரவு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை … Read more