ஹிட்லர் விமர்சனம்: காலாவதியான டெம்ப்ளேட்டை விடுங்க; இந்தப் பேருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?!

தமிழ்த் திராவிட சமுதாயக் கட்சியின் அமைச்சர் (சரண் ராஜ்) ஊழல் வழக்கில் சிக்கித் தேர்தலில் தோற்கும் நிலைமை உருவாகிறது. `எப்படியும் தேர்தலில் பணம் கொடுத்து வென்றுவிடுவேன்’ என்று சபதம் எடுக்கும் அமைச்சர், அதற்கான பணிகளை முடுக்கிவிடுகிறார். ஆனால் அந்தப் பணம் கைமாறும் நேரத்தில் திருடப்பட்டு, அவரது கூட்டாளிகள் மர்மநபர்களால் கொல்லப்படுகிறார்கள். அதை விசாரிக்கும் அதிகாரபூர்வமற்ற விசாரணை அதிகாரியாக உள்ளே நுழைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இதற்கு மத்தியில் ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் விஜய் ஆண்டனி இந்த … Read more

“வரி உயர்வால் மக்களின் தலையில் இடியை இறக்குவதுதான் விடியலை தருவதா?” – தமாகா காட்டம்

சென்னை: “திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுக்குள் இரண்டு முறை சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரி உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களின் தலையில் இடியை இறக்குவது தான் விடியலை தருவதா?” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் … Read more

கேரளாவில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மற்றொருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்கு புதிதாக வரும் அனைவரும் மாநில சுகாதார நிறுவனத்தை அணுக வேண்டும் என்றும், நோய் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள … Read more

ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..

Jayam Ravi Allegations On His Mother In Law : “நான் செய்யும் செலவுக்கு மட்டும் கணக்கு கேட்கிறார்.  அதை என் உதவியாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்கிறார்.  இது என் தன்மானத்தை பாதிக்கும் செயல்” என்று விவாகரத்துக்கான காரணமாக சொல்கிறார் ஜெயம் ரவி.  

Gethu Dinesh: `நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' – கெத்து தினேஷ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகால திரைப்பயணத்தில், கெத்தாக பரிணமித்திருக்கும் அட்டகத்தி தினேஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கூத்துப் பட்டறையில் தனது சினிமா கனவை நோக்கி அடியெடுத்துவைத்த தினேஷ், ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தியில், நாயகனாக அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் ரஞ்சித்தின் அரசியல் குறியீடுகள் ஒரு லேயரில் சென்றுகொண்டிருக்க மறுபக்கம் ஜாலியான கல்லூரி இளைஞர் கதாபாத்திரத்தில் காதல் செய்வது, லவ் சொல்லப்போய் … Read more

ஐரோப்பிய பந்தய சீசனுக்காக வெயிட்டிங்… ஃபெராரி 488 EVO சேலஞ்… துபாயில் டெஸ்ட் ரைடு செய்த நடிகர் அஜித்…

ஐரோப்பிய கார் பந்தய சீசன் வரவிருக்கும் நிலையில் துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ் காரை நடிகர் அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். விடாமுயற்சியுடன் நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதாக நட்சத்திர கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார். இந்த நிலையில் ஐரோப்பிய கார் பந்தய சீசனை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நடிகர் அஜித் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். துபாயில் உள்ள கார் பந்தய மைதானம் … Read more

Raghu Thatha OTT: கீர்த்தி சுரேஷை கைவிடாத ரசிகர்கள்.. ஓடிடியில் ரகு தாத்தாவுக்கு ஏகோபித்த ஆதரவு

சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி

திருப்பதியில் ஒரு மாதத்திற்கு காவல் சட்டப்பிரிவு- 30 அமல்; போலீசார் அதிரடி

திருப்பதி ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்த 18-ம் தேதியன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்துள்ளார். இதன்படி ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜக, … Read more

தோனி, கங்குலி இல்லை… நான் பார்த்த சிறந்த கேப்டன் இவர்தான் – யுவராஜ் சிங்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அனில் கும்ப்ளே தாம் பார்த்த சிறந்த இந்திய கேப்டன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் – ஜோ பைடன் அதிரடி

வாஷிங்டன், அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்காவில் 2024-ல் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், … Read more