கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜையில் பெண்கள் பாதுகாப்பும் ஒரு கருப்பொருள் 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு துர்கை சிலை வைத்து வழிபடுவர். 10 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், சமூக பிரச்சினைகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் கருப்பொருளாக இருக்கும். இவற்றை பிரதிபலிக்கும் வகையில் பந்தல், சிலைகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள துர்கா பூஜை விழாவுக்கான கருப்பொருளை விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்கெனவே … Read more

ரஜினியிடம் எப்போதும் கேட்கமாட்டேன்.. ஓபனாக சொன்ன வைரமுத்து.. இவ்வளவு நடந்திருக்கா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல்

எமர்ஜென்சியில்கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது: செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: சகோதரர் வி.செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறை என்பது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச்செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைப்பதன்மூலம் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க … Read more

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான் என கூறிய நீதிபதி மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்துவைப்பு: டி.ஒய்.சந்திரசூட் உத்தரவு

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா, “பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி பாகிஸ்தானை போல இருக்கின்றன” என விமர்சித்தார். அதேபோல் வேறொரு வழக்கில், பெண் வழக்கறிஞரிடம், “அவர் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறத்தை கூட சொல்வீர்கள் போலிருக்கிறதே?” என கேள்வி எழுப்பினார். இந்த இரு சம்பவங்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை … Read more

மருமகள்கள் கொடுத்த சர்பிரைஸ்.. கண்கலங்கிய பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பிரமோ!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த எபிசோட்களுக்கான ப்ரோமோவும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தன்னுடைய அண்ணன் குமரன், முன்னதாக சரவணன் திருமணத்தில் தன்னையும் மீனாவையும் கடத்தியது குறித்து ராஜி இரு குடும்பத்தினர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார். இந்த விஷயத்தை இத்தனை நாட்களாக மீனா மற்றும் ராஜி

நிபா வைரஸ் எதிரொலி: குமரியில் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை

நாகர்கோவில்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து தமிழகத்தின் அண்டை மாவட்டமான குமரிக்கு வருவோரை களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் கேரள சுற்றுலாப் பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை … Read more

முதல்வர் சித்தராமையா மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரிக்க வேண்டும்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லோக் ஆயுக்தாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து … Read more

ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா EV பேட்டரி மேம்பாட்டிற்கான கூட்டு தொழில்நுட்ப திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன

தென் கொரியாவின் வாகன நிறுவனங்களான ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான LFP (லித்தியம் இரும்பு பாஸ்பேட்) பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான கேத்தோடு பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான கூட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. Hyundai Steel Co. மற்றும் EcoPro BM ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டுத் திட்டம், LFP பேட்டரி கத்தோட்களின் உற்பத்தியின் போது முன்னோடிகளைப் பயன்படுத்தாமல் நேரடியாகப் பொருளை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று செய்தி நிறுவனம் … Read more

பிரச்சினை எல்லாம் ஓவர்.. அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து வருகிறார். எம்எஸ் பாஸ்கருடன் இணைந்து ஹரிஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பார்க்கிங் படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான லப்பர் பந்து படமும் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்த

மாணவர்களுக்கு அநீதி இழைக்காத வகையில் புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினையை உடனடியாக தீர்க்கவும் – பிரதமர் பணிப்புரை

15.09.2024 அன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் முன்னரே வெளிவந்துள்ளதாக தெரியவந்ததன் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (26.09.2024) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் பூர்வாங்க உள்ளக விசாரணையை நடத்தி, இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. … Read more