ஜாமீன் உத்தரவாதங்கள் ஏற்பு: செந்தில் பாலாஜியை விடுவிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜாமீன் உத்தரவாதங்களை எங்கு தாக்கல் செய்வது என்ற விவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரது உத்தரவாதங்களை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. … Read more

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்: கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் முரளி கிருஷ்ணா நேற்று திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கூறியிருப்ப தாவது: பத்து லட்சம் கிலோ தரமான நெய்யை சப்ளை செய்ய கடந்த மே மாதம் 15-ம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து … Read more

டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுச்சேரி டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல் அசதியுடன் சளி, காய்ச்சலால் கடும் அவதிக்குள்ளானார். இதையொட்டி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரிடம் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு ஆலோசனை தெரிவித்ததன்படி அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் நமவச்சிவாயத்தின் ரத்த … Read more

தேவாரா படத்திற்கு கவர்ச்சி நடனமாடி வாழ்த்து தெரிவித்த ஷனம் ஷெட்டி.. வீடியோவ பாக்கனுமே!

சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது. ‘பத்தவைக்கும்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன்

நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது -மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

• அடுத்த வருடத்திற்கு போதுமான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். • வெளிநாட்டு உதவியில் இயங்கும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி வழங்க குழு • கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமத்திற்கு நிதி செல்லும் பொறிமுறையொன்றை தயாரிக்கவும் இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர்.   மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை … Read more

Kangana Ranaut : `சில காட்சிகளை கட் செய்தால்தான் ரிலீஸ்!' – கங்கனாவுக்கு தணிக்கை குழு பதில்!

கங்கனா ரனாவத் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘எமர்ஜென்சி’. படத்தில் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார் கங்கனா. எமர்ஜென்சி சமயத்தில் நிகழ்ந்த விஷயங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். செப்டம்பர் 6-ம் தேதி இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீக்கியர்களை தவறாக சித்திரித்துள்ளதாகக் கூறி சீக்கிய அமைப்பினர் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு தணிக்கை குழு பரிந்துரைத்த சில காட்சிகளை நீக்காததால் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தணிக்கை குழு தணிக்கை சான்றிதழைக் கொடுக்காமல் … Read more

பஹ்ரைனில் கைதான 28 மீனவர்களை மீட்க சட்ட உதவி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலி்ன் கடிதம்

சென்னை: பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான சட்டம் மற்றும் தூதரக உதவிகளை வழங்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டுக்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்.11ம் தேதி கைது … Read more

“பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர்தான் ஆனால் அவர் கடவுள் அல்ல” – கேஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சக்திவாய்ந்தவர்தான். ஆனால் அவர் ஒன்றும் கடவுள் அல்ல என்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமாவுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லி சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “என்னையும் மணிஷ் சிசோடியாவையும் இங்கு பார்ப்பது எதிர்கட்சியில் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கு சோகமாக இருக்கும். நான் எப்போதும் சொல்வதுதான். பிரதமர் நரேந்திர மோடி சக்திவாய்ந்தவர்தான். … Read more

சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் ஐறை தண்டனை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பியாண்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார்.  இதையொட்டி பாஜக தலைவர் கிரித் சவுமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். சஞ்சய் ராவத் … Read more

ஆர்எஸ்எஸ் \"எலிகள்\" இல்லை.. இந்து தர்மத்தை காக்க வந்த \"சிங்கம்\".. ஜார்கண்ட் முதல்வருக்கு பாஜக பதிலடி

ராஞ்சி: ஜார்கண்டில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன் ஆர்எஸ்எஸ் அமைப்பை எலிகளுடன் ஒப்பிட்டார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மத நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சிங்கம் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு Source Link