471 நாட்களுக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார் செந்தில் பாலாஜி – திமுகவினர் உற்சாக வரவேற்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு சிரித்த முகத்துடன் அவர் வெளியே வந்தார். சிறையின் வெளியே காத்திருத்த திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கு என்ன? – கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், … Read more

“மனித குலத்துக்கே பாகிஸ்தான் ஓர் எதிரி” – ஜம்மு காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் பேச்சு

ராம்கர் (ஜம்மு காஷ்மீர்): “பாகிஸ்தான் நாடானது மனித குலத்தின் எதிரி” என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராம்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “சேவை, பாதுகாப்பு, நல்லாட்சி ஆகியவற்றின் சின்னமாக பாஜக திகழ்கிறது. ராம்கர் சட்டமன்றத் தொகுதி மக்கள், பாஜகவுக்கு ஆசி … Read more

இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ராமேசுவரம்: இலங்கை நாடாளுமன்றத்தை புதிய அதிபர் அநுர குமார திசா நாயக்க முன்னதாகவே கலைத்ததால் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிப் பெற்று கடந்த திங்கட்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். செவ்வாய்கிழமை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமர சூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்திய அநுர குமார … Read more

கனமழை காரணமாக மோடியின் புனே பயணம் ரத்து

புனே மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்த் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த கனமழையால் மும்பை, புனே நகரங்களில் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரதமர் மோடி இன்று புனேவுக்கு பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று புனேவில் பிரதமர் மோடி புதிய வழித்தடத்தில் மெட்ரோ … Read more

கேப்டனுக்கு மரியாதை செய்த லப்பர் பந்து டீம்.. அன்னதானத்துலையும் கலந்து அசத்தல்!

 சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலர் படம் குறித்து

கில், பும்ரா இல்லை… ரோகித்துக்கு பின் அவர்தான் டெஸ்ட் கேப்டனாக தகுதியானவர் – பாக்.முன்னாள் வீரர்

கராச்சி, இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளுக்கும் ரோகித் சர்மா தலைமை தாங்கினார். ஆனால் டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து பிசிசிஐ சூர்யகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக நியமித்துள்ளது. மேலும் 3 வடிவிலான போட்டிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவரை ஆல் பார்மட் வீரராக … Read more

மதுரை: அடைக்கப்பட்ட கால்வாய்… குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; கவனிக்குமா பேரூராட்சி?

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் கோகுல் நகர் தெருப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கழிவு நீர் கால்வாய் செல்லும் வழி அடைக்கப்பட்டிருப்பதால், கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்புவரை இத்தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய், தெருவைத் தாண்டி பக்கத்திலுள்ள ஒடைக்கு அருகில் திருப்பப்பட்டிருந்தது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. மதுரை – கோகுல் நகர் தெரு இந்த நிலத்தின் … Read more

“செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் சாட்சிகள் பாதிக்கப்படுவர்” – வானதி சீனிவாசன் கருத்து

கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் பல்வேறு வகை மரக்கன்றுகளை நடவு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “செந்தில் … Read more

“அறிவியலில் நமது பழங்கால பெருமையை நாடு மீட்டெடுத்து வருகிறது” – குடியரசு துணைத் தலைவர்

புதுடெல்லி: கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகத் திருப்தி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அறிவியலில் நமது பழங்கால பெருமையை நாடு மீட்டெடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) 83வது நிறுவன தினம் புதுடெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு … Read more

‘வாய்ப்பே இல்லை…’ – லெபனான் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் திட்டவட்ட மறுப்பு

ஜெருசலேம்: ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், “இது உண்மை இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக லெபனான் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது இஸ்ரேல். தற்போது, தரைவழி தாக்குதலும் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் சாரை சாரையாக லெபனான் … Read more