Senthil Balaji : செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Senthil Balaji released from jail : செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்த நிலையில், விசாரணைக்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இன்று புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்கு சந்தை

மும்பை’ இன்று இந்திய பங்குச் சந்தை ஒரு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பங்குச் சந்தை வணிகம் கடந்த சில நாட்களாக எழுச்சியுடனே காணப்படுகிறது. இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 211 புள்ளிகள் அதிகரித்து 26,216 ஆகவும் இருந்தது. சென்செக்ஸ் -ஸின் 45 ஆண்டு … Read more

Meiyazhagan Box Office Prediction: பாசிட்டிவ் விமர்சனங்கள்.. மெய்யழகன் முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். பத்திரிகையாளர் காட்சியிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் மெய்யழகன் வெளியாகிறது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் சொதப்பிய நிலையில், மெய்யழகன் திரைப்படம் கம்பேக் படமாக அமையும்

மராட்டிய மாநிலத்தில் கனமழை; பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து

மும்பை, மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் மும்பை, புனே நகரங்களில் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, பிரதமர் மோடி இன்று புனேவுக்கு பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புனேவில் பிரதமர் மோடி இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாகவும், சுமார் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளர்ச்சி … Read more

கோலி, பும்ரா இல்லை.. எங்கள் அணியில் அந்த இந்திய வீரர் இருந்தால் நன்றாக இருக்கும் – ஹெட், மார்ஷ்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெற உள்ளது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த … Read more

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொன்தா (ஓய்வு) நேற்று மாலை (செப். 25) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ செங்ஹொங் இந்நிகழ்விட்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை வரேவற்றார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சு அதிகாரிகள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள், பாதுகாப்புப் … Read more

தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா' | பகுதி 1

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..! `தாராவியின் கதை’ இந்தியா மட்டுமன்றி, ஆசியாவிலே அதிக அளவிலான குடிசைகள் எங்கு இருக்கிறது என்று கேட்டால், … Read more

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவைக் கொடுத்துள்ளது” – அமைச்சர் முத்துசாமி 

கோவை: “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை கொடுத்துள்ளது” என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா இன்று (செப்.26) முதல் நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதுதொடர்பான கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

‘பாஜக அரசு ஹரியானாவை அழித்துவிட்டது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அஸ்ஸாந்த் (ஹரியானா): ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மாநிலத்தை அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அஸ்ஸாந்த் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்தேன். ஹரியானாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்கா வந்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. நான் அந்த சகோதரர்களை அங்கு சந்தித்தேன். ஒரு … Read more

IND vs BAN: கான்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட் மழையால் கைவிடப்படுமா?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை, செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இப்போது மழை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இராண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா இருந்தது. அது நடக்குமா? என்பது இப்போது மழையை பொறுத்து தீர்மானமாகும் நிலை உருவாகியுள்ளது.  கான்பூர் வானிலை … Read more