அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்ற கார் தார் ROXX 4×4! அறிமுக விலை, சிறப்பம்சங்கள்…

பிரபல கார் நிறுவனமான மஹிந்திராவின் அதிநவீன 4XPLOR தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள வாகனம் தார் ROXX. இதில் எலக்ட்ரானிக் லாக்கிங் வேறுபாடுகள் மற்றும் சிறந்த இழுவைக்கான குறைந்த-விகித பரிமாற்ற கேஸ் என மேம்பட்ட ஆஃப்-ரோடு அமைப்புகள் நிறைந்துள்ளன.  பனி நடுங்கும் குளிர் பிரதேசமாக இருந்தாலும் சரி, மணல் நிறைந்த பாலைவனமாக இருந்தாலும், சேறு-சகதி கொண்ட சாலையாக இருந்தாலும் அழகாய் செல்லும் கார் இது. சாகச பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற இந்த கார், 650 மிமீ வரை water-wading திறனைக் … Read more

43 பேரை பலி வாங்கிய பீகார் புனித நீராடும் பண்டிகை

சம்பாரன் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் கொண்டாடப்பட்ட பண்டிகையின்போது, தங்களுடைய குழந்தைகளின் நலன்களுக்காக பெண்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். பிறகு குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். இந்த பண்டிகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் பீகாரில் உள்ள கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், நாளந்தா, அவுரங்காபாத், … Read more

செந்தில் பாலாஜி ரிலீஸ்! பாஜகவின் வாஷிங் மெஷின் மாடலை பின்பற்றும் முதலமைச்சர் – இயக்குநர் லெனின் பாரதி

சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போது மிகவும் பரபரப்பான விஷயமாக மாறி இருப்பது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 15 மாதங்கள் அதாவது 417 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதுதான். கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக

காஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு

ஸ்ரீநகர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், நேற்று 2-வது கட்ட … Read more

இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட் போட்டி: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா..? வெளியான தகவல்

கான்பூர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சூழலில் … Read more

தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் – 2024 போட்டியில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தங்கப்பதக்கம்

தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் – 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு இலங்கை விமானப்படை (SLAF) ஜூடோ வீரர்கள் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். விமானப்படை சார்ஜன்ட் தர்மவர்தன 73 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கோப்ரல் அபேசிங்க 100 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் என விமானப்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் சோன்புரி நகரில் கடந்த … Read more

'அடேங்கப்பா 11'ல காத்தாடி தான் பெரிய பிளேயர்! -Bala Saravanan |Lubber Pandhu| Harish Kalyan |Dinesh

இந்த உரையாடலில் நடிகர் பால சரவணன், “லப்பர் பந்து ” குழுவினருடனான தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவர் எப்படி  இந்தப்படத்தில் ஒரு பகுதியாக சேர்ந்தார். அவரது கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பின் போது குழுவுடன் பகிர்ந்து கொண்ட நகைச்சுவையான தருணங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அவரின் முழுபேட்டி இவ்வாறு பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பாலசரவணன். அவற்றை முழுமையாகக் காண லிங்கை க்ளிக் செய்யவும். Source link

தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்: ராமதாஸ்

விழுப்புரம்: தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றிருக்கிறார். ஈழத்தமிழர் சிக்கலுக்கு என்றாவது ஒருநாள் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை இவரது வெற்றி சிதைத்திருக்கிறது. … Read more

“காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது” – அமித் ஷா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாக அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செனானியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீரின் இந்த தேர்தல், இங்கு மூன்று குடும்பங்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல். சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப் … Read more

Meiyazhagan: `தனி வழியைக் காட்டியிருக்கிறார்கள்' – டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

கார்த்தி நடித்திருக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ’96’ பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூர்யா – ஜோதிகாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. நாளை வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சூர்யா, கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான … Read more