புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளில் 40% பேர் ஜம்முவில் வாக்களிப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நேற்று (செப். 26) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளில் கிட்டத்தட்ட 40% பேர் ஜம்முவில் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெரும்பாலான பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறி ஜம்மு உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகளில் 40% பேர் ஜம்முவில் நேற்று வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “ஜம்முவில் உள்ள 19 வாக்குச் சாவடிகளில் கிட்டத்தட்ட 40% வாக்குகளும், அதைத் தொடர்ந்து … Read more

ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!

How To Be Confident Like Actor Rajinikanth : நம்மில் பலருக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டார் என்ற பெயர் வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  

பிளிப்கார்ட் சலுகை விற்பனை… 6000 ரூபாயில் ஸ்மார்ட் டிவி… மிஸ் பண்ணாதீங்க

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது.  பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் தயாரிப்புகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.  இதில் ஸ்மார்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை மிகவும் மலிவான விலையில் வாங்கலால். சிறிய, நடுத்தர அல்லது பெரிய அளவிலான அனைத்து ஸ்மார்ட் டிவிக்களுக்கும் சிறந்த தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் சலுகை விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டபூர்வ அங்கீகாரம்

பாங்காக் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்து சட்டபூர்வ அங்கிகாரம் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.  தற்போது தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு … Read more

Jayam Ravi: மும்பையில் முகாமிட்ட ஜெயம் ரவி.. சூர்யாவை போல பாலிவுட் பக்கம் இவரும் கிளம்பிட்டாரா பாஸ்?

மும்பை: நடிகர் ஜெயம் ரவி மும்பைக்குச் சென்றுள்ள நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எடுத்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தென்னிந்திய நடிகர்கள் பலர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகைகள் அதிகளவில் மும்பைக்கு அடிக்கடி பறந்து வரும் நிலையில், ஜெயம் ரவி திடீரென மும்பைக்கு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

புதுடெல்லி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய … Read more

Euler StromEV Truck: அதிநவீன பாதுகாப்புடன் வந்த ஸ்டோர்ம் எலெக்ட்ரிக் டிரக் ரேஞ்ச் மற்றும் விலை

200 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் ஸ்டோர்ம் இவி எல்ஆர் (StromEV LR) மற்றும் 140 கிமீ ரேஞ்ச் வழங்கும் ஸ்டோர்ம் இவி T1250 என இரண்டு மாடல்களை ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரோம் இவி மாடல் 4 சக்கர இலகுரக வர்த்தக வாகன பிரிவில் மிக சிறப்பான வசதிகளை வழங்குகிறது. 1250 கிலோ சுமைதாங்கும் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாக இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் … Read more

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை உதவி

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி இழுவை படகு நாடு திரும்புவதற்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியது. யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் மிதந்து கொண்டிருந்த இந்திய மீன்பிடி இழுவை படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 22) கடலோர பாதுகாப்பு படை மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் விரைவுத் தாக்குதல் படகு ஒன்றும் இதனை சோதனையிட்டதில், ஐந்து பேருடன் … Read more

Senthil Balaji: `ஆருயிர் சகோதரரே… உன் தியாகம் பெரிது; உறுதி அதனினும் பெரிது' – முதல்வர் ஸ்டாலின்

நீண்டநாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட… — M.K.Stalin (@mkstalin) September 26, 2024 … Read more

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் அவரது தொலைநோக்கு கொண்ட தலைமை மற்றும் விலைமதிப்பற்ற பணி என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது பகுத்தறிவு மற்றும் அர்ப்பணிப்பு தற்போதையை தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் இன்றி (செப்.26) தனது … Read more