செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் உத்தரவு

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று (செப்.26) இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனையடுத்து 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலையாகும் நிலை உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு … Read more

லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: முழு வீச்சு போர் குறித்து பைடன் எச்சரிக்கை

லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை … Read more

OTT Releases : இந்த வார ஓடிடி விருந்து! எந்த புதுப்படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

This Week OTT Releases : இந்த வாரம், ஓடிடியில் எந்தெந்த புது படங்கள் வெளியாகின்றன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.   

உச்சம் தொட்ட BSNL… 14,500 அடி உயரத்தில் 4G சேவை… கலக்கத்தில் ஜியோ

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாஉள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர், தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியதன் விளைவாக, பல தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர். மிகவும் மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை சமீபத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் மூலம், BSNL … Read more

அரசியலில் இருந்து மோடிக்கு 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா? :  கெஜ்ரிவால் வினா

டெல்லி மோடிக்கு அரசியலில் இருந்து 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா என ஆர் எஸ் எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார் கடந்த 22-ந் தேதி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகள் விடுத்தார். நேற்று அவர் மோகன் பகவத்துக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். கெஜ்ரிவால் அந்த கடிதத்தில், “பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை … Read more

Meiyazhagan Review: மெய்யழகன் விமர்சனம்.. அன்பும் பாசமும் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது!

நடிகர்கள்: கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யாஇசை: கோவிந்த் வசந்தாஇயக்கம்: பிரேம் குமார் சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், அந்த படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க.. விஜய் சேதுபதி, த்ரிஷாவை வைத்து 96 எனும்

Vijay: `TVK மாநாடு; 33 நிபந்தனைகள்… 17 கட்டாயம்’ – தவெக மாநாட்டுக்கு அனுமதி!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகக் கட்சி தொடங்கி, அதன் கொடி, பாடல் என தொடர் அறிவிப்புகள் மூலம் அரசியல் அரங்கில் பரபரப்புடன் இயங்கி வருகிறார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ம் தேதி த.வெ.க வின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்படும் என த.வெ.க தலைவர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மாநாட்டுக்கான வேலைகள் சுறுசுறுப்பாக தொடங்கியது. மாநாடு நடத்துவதற்காக இடத் தேர்வு தொடங்கி பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. த.வெ.க. தலைவர் விஜய் … Read more

அடித்தட்டு தொண்டர்களின் குரலாக ஆதவ் அர்ஜுனா: அடுத்தடுத்த சர்ச்சைக்கு இடையே விசிகவில் நடப்பது என்ன?

சென்னை: மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் வட்டாரத்தில் விசிக மீதான கவனம் அதிகரித்துள்ளது. சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மாநாடு தொடர்பாக விரிவான அறிவிப்பை வெளியிட்டபோது, அதிமுகவும் மாநாட்டில் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் சொன்னவுடன் பரபரப்பு மேலும் தொற்றிக் கொண்டது. இதுதொடர்பான விவாதம் சற்று ஓய்ந்த நிலையில், திருமாவளவனின் சமூக வலைத்தள பக்கத்தில் காணொலி பதிவிட்டு நீக்கப்பட்டது அடுத்த சர்ச்சையாக உருவெடுத்தது. … Read more

மும்பையில் கனமழை: ஒருவர் பலி; பள்ளிகளுக்கு விடுமுறை

மும்பை: மும்பையில் நேற்று (புதன்கிழமை) கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவத்தில் ஒருவர் பலியானார். இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தானே, பால்கர், புனே, பிம்ப்ரி – சின்ச்வாட் பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மழை நீர் தேங்கியதால் ஆங்காங்கே புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சாலைப் … Read more

“இந்தியா, சீனா நல்ல நண்பர்கள்” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க

கொழும்பு: “இந்தியாவும், சீனாவும் இலங்கையின் நல்ல நண்பர்கள்” என்று இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகியிருக்கும் அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் இந்தியாவை கடுமையாக விமர்சிப்பவராக இருந்து வந்தார். இதனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் சீனாவை ஆதரிப்பார் என்ற கருத்து நிலவியது. இந்நிலையில், அவர் சர்வதேச நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியியல் அரசியலில், சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இந்தியாவும், சீனாவும் இலங்கையின் நல்ல … Read more