Jayam Ravi: பண விஷயத்தில் ரவியை ஏமாற்றிய மாமியார்.. ஆர்த்தி ஓவர் சந்தேகம்.. எப்படி வாழ முடியும்?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் விஷயம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் பல புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக ஜெயம் ரவி தான் விவாகரத்து செய்ய என்ன காரணம் என கூறும் விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி தரப்பில் இருந்து இதுவரை

விவசாய மின் விநியோகத்துக்கு தனி வழித்தடம்: பணிகளை தொடங்கியது மின்வாரியம்

சென்னை: விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்ய தனி வழித்தடம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கிராமங்களில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு ஒரே வழித்தடத்தில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தினசரி 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயத்துக்கான மின்சாரத்தை சிலர் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்துவதால், அந்த வழித்தடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை ஏற்படுகிறது. … Read more

கலப்பட நெய்க்காக கோயில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை: கல்வெட்டு துறை இயக்குநர் சிறப்பு பேட்டி

திருமலை: கல்வெட்டு துறை இயக்குநர் முனிரத்தினம் “இந்து தமிழ் திசை”க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: அரசர் காலங்களிலேயே திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எவ்வாறு பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்? அதற்கான போக்குவரத்து எப்படி இருத்தல் அவசியம் ? என்பது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. அரசர் காலத்தில் நெய்யை சரிவர பராமரிக்காமல் போன கோயில் ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் கொடுத்த தண்டனை விவரங்களும் கல்வெட்டுகளில் பதிவிடப்பட்டுள்ளன. … Read more

ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு காஷ்மீர் பற்றி குறிப்பிடுவதை முதல் முறையாக தவிர்த்தார் துருக்கி அதிபர்

நியூயார்க்: கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஐ.நா. பொதுச் சபையில் பேசும் போது, ஜம்மு காஷ்மீர் பற்றி குறிப்பிட்டு வந்த துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், இந்தாண்டு காஷ்மீர் பற்றி பேசவில்லை. துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ஐ.நா. பொதுச் சபையில் பேசும்போதெல்லாம் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசுவார். குறிப்பாக காஷ்மீரில் 370-வது பிரிவு சிறப்பு சட்டம் ரத்து குறித்து பேசுவார். ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசின் கொள்கையை விமர்சிப்பார். காஷ்மீரில் அமைதி, நிலைத்தன்மை திரும்ப சர்வதேச நாடுகள் … Read more

Meiyazhagan Review : சுமாரா? சூப்பரா? மெய்யழகன் படம் எப்படி? திரை விமர்சனம்..

Meiyazhagan Movie Reivew Tamil : கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகியிருக்கும் மெய்யழகன் படத்தின் திரை விமர்சனம்.   

சமந்தாவை பார்த்தால் சூப்பர்தான்.. அடேங்கப்பா நாக சைதன்யா காதலி சோபிதா ஓபனாக சொல்லிட்டாங்களே

சென்னை: சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியான நடிகை. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். பிறகு அவருக்கு மையோசிடிஸ் எனும் அரியவகை தோல் நோய் வந்தது. அதிலிருந்து மீண்டிருக்கும் அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அநேகமாக அடுத்தடுத்து அவர்

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: நிதி நிலுவை குறித்து பிரதமரிடம் பேசுகிறார்

சென்னை: டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார். தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். … Read more

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: தொழிலாளர்கள் குறித்த புதிய ஆய்வறிக்கை

புதுடெல்லி: இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் மத்தியில் கடந்த 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரை நிலவிய வேலையில்லா திண்டாட்டம் குறித்து நடத்தப்பட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பின் (பிஎல்எஃப்எஸ்) முடிவுகள் கடந்த திங்களன்று வெளியானது. இதில் நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் உச்சபட்சம் உள்ள மாநிலம் கேரளா என்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்களில் 29.9 சதவீதத்தினருக்கு வேலையில்லை என்பதும் … Read more

பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-ம் தேதி தேர்தல்

ராமேசுவரம்: இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். நவ.14-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த செப்.21-ம் தேதி நடந்த 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். அதிபராக பதவியேற்றக் கொண்ட அநுர குமார திசாநாயக்க, நேற்று முன்தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான … Read more