குஜராத்தில் ரயில் பாதையை சேதப்படுத்திய 3 ஊழியர்கள் கைது: இரவுப் பணி, பாராட்டு பெறுவதற்காக சதி

சூரத்: இரவுப் பணி மற்றும் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்காக, ரயில்வே ஊழியர்கள் 3 பேர் ரயில்பாதையை சேதப்படுத்தி ரயிலைதடம் புரள செய்ய சதி செய்துள்ளனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பணியாற்றும் ரயில்வே டிராக்மேன்கள் சுபாஷ், மனீஷ் மிஸ்திரி, சுபம் ஜெய்ஸ்வல் ஆகியோர் ரயில்பாதையை ஆய்வு செய்வதற்காக சென்றனர். அன்று காலை 5.30 மணியளவில் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து தண்டவாளத்தின் ஃபிஸ் பிளேட்டுகள் மற்றும் கிளிப்புகள் அகற்றப்பட்டு ரயிலை … Read more

விரைவில் தமிழக சுங்கச்சாவடிகள் முன்பு போராட்டம் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் தம்ழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்கள் 5 முதல் 7 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தேசிய … Read more

விஜய்யின் அரசியல் என்ட்ரி.. சசிகுமார் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றுவாரா தளபதி?

சென்னை: நடிகர் சசிகுமார் அடுத்தடுத்த அழுத்தமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அயோத்தி, கருடன் என இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகுமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள நந்தன் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்திற்காக அதிகப்படியான

இன்றைய வானிலை முன்னறிவிப்பு…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 26ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 செப்டம்பர் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ … Read more

ரூ.78.31 கோடி மதிப்பிலான பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் திறப்பு

ஆவடி: ஆவடி அருகே ரூ.78.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை இன்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம், சி.டி.எச். சாலையில் உள்ள எல்.சி., 2 ரயில்வே கடவுப் பாதையை கடந்து, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு நாள் தோறும் 20-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று, சென்னை, ஆவடிக்கு திரும்புகின்றன. ஆகவே, இந்த … Read more

மனித தவறுகளால் நிகழும் விமான விபத்துகள் 10 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்

புதுடெல்லி: மனித தவறுகளால் நிகழும் விமானவிபத்துகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமான விபத்துகளில் மனித காரணிகள் என்ற தலைப்பில் முதல் தேசிய பாதுகாப்பு கருத்தரங்கம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் மோகன் நாயுடு இதுகுறித்து மேலும் கூறியதாவது: உலகளவில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் 80 சதவீத விபத்துகளுக்கு மனித தவறுகளே முக்கியகாரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இதனால் ஏற்படும் … Read more

விவோ வி40e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி40e போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது விவோ வி40 சீரிஸில் வெளிவந்த வி40 மற்றும் வி40 புரோ மாடலுக்கு அடுத்ததாக வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய … Read more

SPB : “ `எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' – பாலுவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக..!' – ஸ்டாலின்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாள் இன்று. கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் அவர் மறைந்தார். அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் பாடல்கள் ஸ்பாடிஃபையில் டாப் இடத்தை இன்றும் பிடித்திருகிறது. அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்.பி.பி-யின் மகன் சரண். இந்த கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் … Read more

சேலம் மாவட்ட கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம்

சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே உள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை ஒன்று உலா வந்து அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயன்று வருகின்றனர்.  ஆனால் வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நேற்று … Read more