Thar ROXX 4×4 price: மஹிந்திராவின் தார் ராக்ஸ் 4X4 எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலில் கொடுக்கப்பட்டிருக்கின்ற 4×4 ஆல் டிரைவ் மாடலின் விலை ரூ.18.79 லட்சம் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட பொழுது ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஆல் வீல் டிரைவ் மாடல்களின் விலை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக 5 டோர்  தார் ராக்ஸ் 4×2 மாடல்களின் ஆரம்ப விலை ரூபாய் 12.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 20.49 லட்சம் வரை அமைந்துள்ளது. மூன்று விதமான … Read more

2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிக்கை..

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மாவட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனு மூலம் முன்மொழியப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, பெயர் குறித்த நியமன பத்திரத்தின் ஊடாக பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை, மற்றும் சுயேட்சை குழுக்களினால் வைப்புச் செய்ய வேண்டிய பணம் பற்றிய விபரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆனைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

Lubber Pandhu: “CSK வீடு உருவானது இப்படிதான்!"- விளக்கும் கலை இயக்குநர் வீரமணி கணேசன்

‘லப்பர் பந்து’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தின் அத்தனை அம்சங்களும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. அதிலும் மிக முக்கியமானது இந்த படத்தின் ஆர்ட் ஒர்க் வேலைகள். ரசிக்க வைக்கும் மஞ்சள் நிற ஹரிஷ் கல்யாண் வீடு, வாழ்வியலை பிரதிபலிக்கும் ‘அட்டகத்தி’ தினேஷ் வீடு என அவ்வளவு யதார்த்தமாக செட்களை அமைத்திருந்தார் கலை இயக்குநர் வீரமணி கணேசன். இந்தப் படத்திற்கு இவர் கலை இயக்குநர் மட்டுமல்ல. கெத்து கதாபாத்திரத்தின் நண்பராகவும் வந்து ஆங்காங்கே காமெடிகளை … Read more

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மத்திய நெடுஞ்சாலைத் துறை அரசாணையை அமல்படுத்த கோரிக்கை

சென்னை: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொண்டுவந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வாகனங்களை உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு வரி சலுகை அளிக்கப் பட்டுள்ளது. சுங்கக் கட்டணம், சாலை வரியில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இது … Read more

லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன்: பிரகாஷ் ராஜுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை

விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதத்துக்காக கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது வாங்கப்பட்ட கலப்பட நெய்யில், விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரு தினங்களுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப் பட்டதைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான … Read more

சுக்கிரனும் குருவும் எதிரெதிரே வந்தால்? ’சில’ ராசிகளுக்கு கொழுத்த பணத்தை கொட்டப் போகும் சமசப்தக யோக யோககாலம் தான்…

சுக்கிரனும் குருவும் எதிரெதிரே வந்தால்? ’சில’ ராசிகளுக்கு கொழுத்த பணத்தை கொட்டப் போகும் சமசப்தக யோக யோககாலம் தான்…

தீபாவின் கண் எதிரே கார்த்திக்குக்கு கல்யாணம் நடக்குமா? பரபரப்பான கார்த்திகை தீபம் எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, ஆசிரமத்தில் இருக்கும் நர்ஸ் தீபாவுக்கு தனக்கு தெரிந்த வைத்தியத்தை பார்க்க இங்கே தூக்கத்தில் இருந்த கார்த்திக் திடீரென எழுந்து தீபாவுக்கு ஏதோ ஆபத்து என்பது போல் தோன்றுவதாக பீல் செய்ய … Read more

Lubber Pandhu `படத்தை பார்த்துவிட்டு ரசிகர் சொன்ன அந்த வாழ்த்து..' – நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டகத்தி தினேஷ், அவருக்கு நிகராக வளர்ந்து வரும் சிறந்த ஆட்டகாராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞரான ஹரிஷ் கல்யாண் இருவருக்குமிடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்குச் சரி நின்று தன்னை நிரூபித்துக் காட்ட … Read more

காம்தார் நகர் பிரதான சாலை இனி எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் மாற்றம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காம்தார் நகர் பிரதான சாலை இனி எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடிய பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பி. அவரது கோடான கோடி ரசிகர்களால் ‘பாடும் நிலா பாலு’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரது மறைவை அடுத்து இவர் நினைவாக அவர் வாழ்ந்த சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காம்தார் நகருக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் … Read more