புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது 

புதிய அமைச்சரவை இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் முதன்முறையாக கூடவுள்ளது. அங்கு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது, அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்.

“விஜய்க்காக சொத்தை விற்று இயக்கத்தை வளர்த்தவரை ஓரம் கட்டியது ஏன்”- புஸ்ஸி ஆனந்திடம் குமுறிய பெண்!

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாநாட்டில் கலந்து கொள்ள வலியுறுத்தி நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுத்து வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கும்பகோணம் நிகழ்ச்சியில் Vijay: “தொண்டர்களுக்கு விஜய்யின் 10 நிபந்தனைகள்… பாராட்டுகிறோம்” -தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் … Read more

“காவிரிப் பிரச்சினையில் அரசியல் கலக்காதீர்” – மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கருத்து

திருச்சி: “காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது,” என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களுரூவிலிருந்து இன்று (செப்.30) தனி விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாள், தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது : “ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் அருளை பெறுவதற்காக இங்கு வந்து தரிசனம் செய்தேன். இங்கிருந்து சேலம் … Read more

‘கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்கவும்’ – லட்டு சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, திருப்பதி லட்டு தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், கலப்படமானதாக இருந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார். மீன் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் … Read more

இந்தியாவில் இருந்து தப்பியோடிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு பாகிஸ்தானில் வரவேற்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக், பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். பிரபல மதபோதகரான இவர், பிற மதங்களைவிட இஸ்லாம் எவ்வாறு உயர்வானது என்பது குறித்து தனது பீஸ் (Pease) தொலைக்காட்சி மூலம் விவாதங்களை நடத்தியவர். அவர் தனது விவாதங்களில் பிற மதங்களை கடுமையாக விமர்சித்ததாக அவர் மீது புகார் உள்ளது. … Read more

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு மீது உச்ச நீதிமன்றம் காட்டம் – முழு விவரம் இதோ

Supreme Court: திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பி உள்ளது.

மணிமேகலையை மறைமுகமாக தாக்கிய பிரியங்கா?! வைரலாகும் பதிவு..

Latest News Priyanka Deshpande Post : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா இதில் டைட்டில் வின்னராகியிருக்கிறார்.   

கத்தியை காட்டி மிரட்டி… மனைவி, மகனை கடத்திய பாஜக பிரமுகர்… வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள் – பின்னணி என்ன?

Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டிராவிட் மகனுக்கு வந்த சோதனை, வாய்ப்பு கிடைச்சும் விளையாட முடியல

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி கர்நாடகாவில் நடைபெற்ற டி20 லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு செய்யபட்டார். அவர் புதுச்சேரியில் நடைபெறும் இந்தியா 19 – ஆஸ்திரேலியா 19 அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக சமித் டிராவிட் இப்போது முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

வீட்டை தியேட்டராக மாற்றலாம்… பிளிப்கார்டில் 55 அங்குல ஸ்மார்ட் டிவி விலை ரூ.23000 மட்டுமே

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சலுகை விற்பனை 2024 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது. பண்டிகை கால சலுகையாக பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.  . இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.  ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் தவிர கட்டணமில்லா EMI … Read more