தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை (நவ.1) விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் 3 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இந்த கடைகளில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தின் … Read more

சிறையில் பிஷ்னோய் அளித்த பேட்டி மீண்டும் வெளியானது: பஞ்சாப் அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: சிறையில் இருந்தபடி லாரன்ஸ் பிஷ்னோய் அளித்த வீடியோ பேட்டி மீண்டும் வெளியானது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தீவிரவாத வழக்குகளில் கைதாகி குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், … Read more

117-வது தேவர் ஜெயந்தி விழா: ஆளுநர், அரசியல் தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி ஆளுநர் மாளிகையில், முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் நந்தனம் தேவர் சிலைக்கு மாலை … Read more

டெல்லியில் இருந்து இந்தூர் வழியாக மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளம் மூலம் நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமான நிலைய காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தூர் வழியாக டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும் ஏர் இந்தியா விமானம் ஏஐ 636-ல் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எக்ஸ் வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை 5.08 மணிக்கு மிரட்டல் வந்தது. ஏற்கெனவே டெல்லியிலிருந்து வந்த அந்த விமானம் இந்தூரிலிருந்து மும்பையை நோக்கி மாலை 4.38 … Read more

Diwali Exclusive:“கணவர் தலையில எண்ணெய் வைக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க என் அம்மா" – நளினி

1980-களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட அப்போதைய ஸ்டார் கதாநாயகர்களுடன் நடித்தவர் நடிகை நளினி. 1987-ல் நடிகர் ராமராஜனை காதல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அருணா, அருண் ஆகிய இரண்டு பிள்ளைகள். குணச்சித்ர நடிகையான இவர், தன் உடல் அசைவுகளாலும், முக பாவனைகளாலும் சிரிக்க வைக்கமுடியும் என்பதை பல படங்களில் நிகழ்த்திக் காட்டியவர். காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் தாண்டி தன்னால் நகைச்சுவையாக பாத்திரத்திலும் ரகளையான பெர்பாமன்ஸ் … Read more

“தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு என் வாழ்த்துகள்” – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு தனது போயாஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவரது ரசிகர்கள், போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி தீபாவளி நாளான இன்றும் ரஜினிக்கு வாழ்த்துச் சொல்ல அவரது வீட்டின் … Read more

ரூ.1 கோடி கோகைனுடன் ஆப்பிரிக்க இளைஞர் நவி மும்பையில் கைது

மும்பை: நவி மும்பையில் ரூ.1 கோடி கோகைன் போதைப்பொருளுடன் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் நவி மும்பை, உல்வே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நவி மும்பை போலீஸார் கடந்த திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இதில் 412 கிராம் எடையுள்ள கோகைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இதையடுத்து வீட்டில் இருந்த கினியா நாட்டை சேர்ந்த 35 வயது நபரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் … Read more

Haripriya: "பாட்டி, பட்டுப்பாவாடை, தஞ்சை சமையல்… இதான் எங்க தீபாவளி" – 'எதிர்நீச்சல்' ஹரிப்பிரியா

எதிர் நீச்சல் சீரியல் கிராமம் முதல் சிட்டி வரை பேசப்பட்ட தொடர். அந்தத் தொடரில் இருக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் நான்கு மருமகள்களில் கூடுதல் கவனம் பெற்றவர் நந்தினி. அட ஆமாங்க.. நக்கல், நையாண்டி, என்பதையெல்லாம் தாண்டி, கொடூர வில்லனாக வரும் ஆதி குணசேகரனைப் பார்த்து எல்லாரும் நடுங்கும் போது, நந்தினி மட்டும், `ம்ஹ்ஹும்…’ என்ற வார்த்தையில் அவரை நக்கல் செய்வதெல்லாம் வேற ரகம். அந்தத் தொடரைப் பார்க்காதவர்களையும் தன் நகைச்சுவை நடிப்பால், ரசிகர் வட்டத்துக்குள் கொண்டு … Read more

Diwali clicks: சூர்யா, ஹரிஷ் கல்யாண், சமந்தா, துருவ், திவ்யபாரதி… பிரபலங்களின் தீபாவளி க்ளிக்ஸ்

Surya – Jyothika Anjali Dushara rithika Athulya Priyanka Arulmohan arun vijay Family Manju Warrior divya bharathi vani bhojan Harish Kalyan Samantha Krithi Source link