இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எம்.டி நிலுஷா பாலசூரியவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக உடனடியாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய திரு. ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய அவர்கள் 2024.09.25 ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுப்புக் காவலில் இருப்பதால், குறித்த பதவியில் பணிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக பொருத்தமான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர உத்தியோகத்தரான திருமதி. பீ.எம்.டீ. நிலுஷா பாலசூரிய அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு பதில்கடமைக்கு நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.