பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி (ஒக்டோபர் 08) வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் மூலம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
அதன்படி, தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க தகுதியுடைய அனைவரின் விண்ணப்பங்களும் 2024 ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், விண்ணப்பங்கள் நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டும் மற்றும் அன்றைய தினம் தபாலில் இடும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.