மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலை 6:55 மணி முதல் இரவு 9:25 வரை மட்டுமே இயங்கி வந்த நிலையில் இனி இரவிலும் விமானங்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை விமான நிலையத்தின் விமான போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் மற்ற நகரங்களுடனான நேரடி விமான சேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.