அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜிதஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (30.09.2024) நடைபெற்ற அiமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜிதஹேரத் கலந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை 25க்கு மேல் இருக்காது என் வலியுறுத்தினார்.
இந்த அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்கள் நிமிக்கப்படமாட்டார்கள் எனவும், அந்தந்த அமைச்சுக்களுக்கு இணையாக 25 பிரதி அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாகவும் வெகுசன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.