IND vs BAN: அதிசயத்தை நிகழ்த்திய இந்தியா… மாபெரும் வெற்றி – WTC பைனல் போவது உறுதியா?

India vs Bangladesh, Kanpur Test: கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வைட் வாஷ் செய்தது. இதன்மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாகி உள்ளது.

பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசம் அணி பெரும் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் வங்கதேசம், இந்தியா உடன் மோத திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த செப்.19ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

அதிசயத்தை நிகழ்த்திய இந்தியா

இதை தொடர்ந்து, கடந்த செப். 27ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளில் இந்தியாவால் 35 ஓவர்களையே வீச முடிந்தது. அடுத்த 2ஆவது, 3ஆவது நாள்கள் தொடர் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் தடைபட்டது. இதனால், வெறும் இரண்டு நாள்கள் ஆட்டம் மட்டுமே இருந்ததால் போட்டி டிராவில் முடியும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், இந்தியா அந்த இடத்தில் இருத்து பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டி உள்ளது.

நேற்று வங்கதேசத்தை 233 ரன்களில் விரைவாக ஆட்டமிழக்கச் செய்தது மட்டுமின்றி, இந்திய அணி களமிறங்கி அதிரடியாக விளையாடி 285 ரன்களை குவித்து உடனே டிக்ளர் செய்ததது. அதாவது, 35 ஓவர்கள்தான் இந்தியா பேட்டிங் செய்தது. 52 ரன்கள் முன்னிலை உன் நேற்றே, 11 ஓவர்களை வீசி வங்கதேசத்தின் 2 விக்கெட்டுகளையும் இந்தியா கைப்பற்றியது. இதனால் இன்று இந்தியாவுக்கு விரைவாக விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை வெறும் 94 ரன்கள் முன்னிலையில் சுருட்டியது. 

வைட்வாஷ் செய்த இந்தியா

இந்தியாவும் 94 ரன்கள் இலக்கை 17.4 ஓவர்களிலேயே அடித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வைட் வாஷ் செய்துள்ளது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதேபோல், முதல் போட்டியில் சதம் அடித்து, 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இரண்டாவது போட்டியில் மொத்தம் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ரவிசந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

A memorable Test Victory#TeamIndia win the 2nd Test by 7 wickets and win the series

Scorecard – https://t.co/JBVX2gyyPf#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/kxvsWxlNVw

— BCCI (@BCCI) October 1, 2024

அஸ்வினின் தொடர் நாயகன் சாதனை

இதன்மூலம், 39 டெஸ்ட் தொடரில் விளையாடி 11 தொடர் நாயகன் விருதைுகளை அஸ்வின் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம், முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ளார். முரளிதரன் 60 தொடர்களில் 11 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்தியா அடுத்துள்ள 8 போட்டிகளில் இன்னும் 3 போட்டிகளை வென்றாலே போதுமானது.

முதலிடத்தில் இந்தியா 

தற்போதும் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில்தான் உள்ளது. ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்திருந்தால் இந்தியா அடுத்த 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியை டிரா செய்ய வேண்டிய நிலை வந்திருக்கும். அதனால்தான் ரோஹித் மற்றும் கம்பீர் ஜோடி அதிரடி பாணியை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக மாற்றி, அதிசயத்தை நிகழ்த்தி காட்டி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.