கார்த்தி , அரவிந்த்சாமி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகிறது `மெய்யழகன்’.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில உரையாடல் காட்சிகள் படத்தை நீளமாக்கி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற விமர்சனம் பல பக்கங்களிலிருந்தும் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு செவி கொடுத்து படத்தில் 18 நிமிட காட்சிகளை நீக்கியிருக்கிறது படக்குழு. இதற்கு முன்பு முழு திரைப்படத்தின் கால அளவு 2 மணி நேரம் 57 நிமிடங்களாக இருந்தது. தற்போது 2 மணி நேரம் 38 நிமிடத்திற்கு படத்தை சுருக்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார், “அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன.
மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது.
எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு. எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை. சூர்யா அண்ணா, கார்த்தி ப்ரதர், ராஜசேகர் சார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்தி அண்ணா என அனைவரும், முதல் சந்திப்பு முதல் இன்று வரை என்னை அரவணைத்து, முழு படைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். எல்லா சூழலிலும் பக்கபலமாக துணை நிற்கிறார்கள். இப்போதும் இந்த நேரக் குறைப்பு செய்யும், என் முடிவிற்கு உடன் நிற்கிறார்கள். அவர்களுக்கு என் பேரன்பும் நன்றியும்.” என தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…