சமீபத்தில் நடந்த சீரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ராஜேஷ் எம். “என் ‘பிரதர்’ படத்தில் மெக்கமிசின் பாடல் எழுதிய பால்டப்பா, அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்தும் வர மறுத்தார். ஒருகட்டத்தில் வந்தார். ஆனால், அவர் நிகழ்சியில் முழுவதும் இல்லை. வேறு வேலை இருப்பதாக கூறி சென்றுவிட்டார். எனவே, பாடலாசிரியர்களும் இசை வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும்” என நகைச்சுவையாக பேசினார்.
அந்தப் பேச்சு வைரலான நிலையில், பலரும் பால்டப்பாவை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்த நிலையில், இயக்குநர் ராஜேஷ்.எம் தன் பேச்சுக்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,“என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் விளையாட்டாகதான் பேசினேன். ‘பிரதர்’ பட இசை வெளியீட்டு விழாவுக்கு பாடலாசியர் பால்டப்பாவை அழைத்து, அவரை மேடையில் ஏற்றி அவருக்கான மரியாதையும், அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் என்றுதான் அந்த விழாவுக்கு அழைத்தேன். ஒரு இளைஞரின் பாடல் பெரும் ஹிட் ஆகியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் மேடையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதுபோல மேடை கிடைக்க அவ்வளவு பேர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதை பெற்ற அவருக்கும் அந்த மேடையை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அன்று அவரால் வர முடியாத சூழல் இருந்திருக்கிறது. அன்று அவருக்கு ஒரு நிகழ்ச்சி இருந்திருக்கிறது. அதனால் அவர் வரவில்லை எனக் கூறிவிட்டார். அதன்பிறக்கும் நிகழ்ச்சி நடக்கும் போது வந்தார்.
எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு, அவர் ஒப்புக்கொண்ட நிகழ்சிக்கு சென்றுவிட்டார். எனக்கு அப்போது அது தெரியாது. அப்படியே நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்துதான், சமீபத்தில் நடந்த சீரன் இசை வெளியீட்டு விழாவில் அப்படி பேசினேன். அதன்பிறக்குதான் அவர் வேறு ஒரு நிகழ்சிக்கு சென்றிருக்கிறார் என அறிந்தேன். அதைத் தொடர்ந்து அவரிடம் பேசினேன்” என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…