Rajini: “ரஜினி நலமுடன் தான் இருக்கிறார்!" – அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருக்கிறார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கமளித்திருந்தார். மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.

ரஜினிகாந்த்

இந்நிலையத்தில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியிருக்கிறார். “அச்சப்படும் அளவுக்கு எதுவுமில்லை. ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். அவருக்கு திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்யப்படவில்லை.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்துவிட்டதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவித்தனர். ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறோம். விரைவில் அவர் வீடு திரும்புவார் ” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.