Thalapathy 69: `விஜய்யுடன் சூர்யாவின் வில்லன்'- படத்தில் இணைந்த பாபி தியோல்!

விஜய்யின் 69-வது திரைப்படத்தை அ.வினோத் இயக்குகிறார்.

சினிமா பயணத்தின் கடைசி திரைப்படமாக இந்த ‘தளபதி -69’ படத்தை அறிவித்திருக்கிறார் விஜய். 5-வது முறையாக விஜய் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

கன்னட திரையுலகின் ‘கே.வின். என் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் வேறெந்த நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது.இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இவர் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகிறது. சூர்யாவை தொடர்ந்து விஜய் திரைப்படத்திலும் தற்போது நடிக்க கமிட்டாகியிருக்கிறார் பாபி தியோல். வில்லன் கதாபாத்திரங்களுக்கு பெயர்போன பாபி தியோல் இந்த படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக படக்குழு, ” 100% அதிகாரப்பூர்வ தகவல் இது. பாபி தியோல் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.” என பதிவிட்டிருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.