ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். பிரீமியம் போன்களான இவற்றை வைத்திருப்பது கவுரம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. என்றாலும், ஐபோன்களின் விலை லட்சங்களில் இருக்கின்றன. இந்நிலையில், பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு குஷியை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE மற்றும் iPad Air தொலைபேசிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய iPhone SE மற்றும் iPad Air ஆகிய இரண்டு மாடல்களும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரலாம் என கூறப்படுகிறது. எனினும் ஆப்பிள் பெரும்பாலும் மார்ச் அல்லது ஏப்ரலில் புதிய ஐபாட்கள் மற்றும் ஐபோன்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்ற நிலையில், இந்த மாதங்களில் வரலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் தனது புதிய iPhone SE மற்றும் iPad Air தொலைபேசிகளை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. iPhone SE மாடல்களில் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு, iPad Air இல் பல மேம்பாடுகள் செய்யப்படும் எனவும், இதில் iPhone SE மாடலுக்கான நவீன வடிவமைப்பு மற்றும் iPad Air-ல் செய்ய திட்டமிட்டுள்ள உள் மேம்பாடுகளும் அடங்கும்.
புதிய ஐபோன் SE மாடல் போனில் ஹோம் பட்டன் இருக்காது என்றும் இந்த போன் ஐபோன் 14 போன்று இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய iPhone SE மாடல் முகப்பு பொத்தான் உள்ளது. இந்த புதிய வடிவமைப்பு ஐபோன் 14 போன்று தோற்றமளிக்கும் போன்களில், முகத்தை காண்பித்து போனை திறக்கும் அம்சத்தை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் iPad Air
iPad Air பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஐபேட் ஏர்-ல் பல மேம்பாடுகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில், உள்ள செயலி வேகமாக செயல்படும் வகையில் இருக்கு. மேலும், நினைவகத்தை அதிகரிக்கவும், சிறந்த திறன் கொண்ட கேமரா மேம்பட்ட அமசங்களுடன் வழங்குவும் திட்டங்கள் உள்ளன. ஆப்பிள் வழக்கமாக பல ஆண்டுகளாக ஐபாட் ஏரின் வடிவமைப்பை மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய போன்களின் விலை
புதிய போன்களின் விலை எவ்வளவு என்பது பற்றி இதுவரை எதுவும் கூறப்படவில்லை. தற்போதைய iPhone SE $429 இல் தொடங்குகிறது. இந்த போனின் வடிவமைப்பு மாறினால் அதன் விலையும் அதிகரிக்கலாம். ஐபாட் ஏர் இப்போது $599 (சுமார் 50000 ரூபாய்) இல் தொடங்குகிறது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டால் அதன் விலையும் மாறலாம்.