சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு […]
