Thalapathy 69: `Halamithi Habibo' – மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் பூஜா ஹெக்டே

விஜய் தனது சினிமா கரியரின் கடைசி படமாக Thalapathy 69 படத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை கன்னட திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான ‘கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கிறது. 5வது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் பிரபலங்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பூஜா ஹெக்டே

இவர் இதற்கு முன் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதுமட்டுமல்ல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44′ படத்திலும் பூஜா ஹெக்டேதான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தமிழ் லைன் அப்பை தாண்டி இந்தியில் ஷாகித் கபூருடன் `தேவா’ படத்திலும் நடித்து வருகிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.