TRAI அமல்படுத்தியுள்ள புதிய விதிகள்… மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை தரத்தை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்டவும் TRAI (Telecom Regulatory Authority of India) நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பயனர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கிறது. மேலும் ஒரு புதிய விதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் மூலம் பயனர்கள் தங்கள் பகுதியில் எந்த நெட்வொர்க் சிறப்பாக உள்ளதை என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி தீர்மானிக்க அனுமதிக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் தங்கள் நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகள் குறித்த தகவல்களை வழங்க TRAI கட்டளையிட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் இருப்பிடத்தில் உள்ள நெட்வொர்க் ஆப்ஷன்களை சரிபார்த்து, அதற்கு ஏற்றவகையில், நெட்வொர்க்கை தேஎர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறது.எடுத்துக்காட்டாக, உங்கள் பகுதியில் ஜியோவின் 5G நெட்வொர்க் கிடைக்கிறதா என்று பார்க்க விரும்பினால், நீங்கள் அவர்களின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் இருப்பிடத்தை உள்ளிட்டு தகவலை அணுகலாம். சென்னையில் 5G நெட்வொர்க் இருப்பதால், அதில் உள்ள எல்லா இடங்களிலும் 5G நெட்வொர்க் அணுகக்கூடியதாக இருக்கும் என்று அர்த்தமல்ல.

உங்கள் இருப்பிடத்தை பொருத்து, ​​நெட்வொர்க் தர நிலை மாறலாம். மொபைல் நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.TRAI விதிமுறைகளின்படி, டெலிகாம் நிறுவனங்கள் வழங்கு சேவை, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலில் பொருந்தாத பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்கப்படும். சில கடுமையான சூழ்நிலையில், மொபைல் சேவை முடக்கம் இதில் அடங்கும்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கொடுக்கும் ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. வியாபார நோக்கில் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் ஸ்பேம் செய்திகள் பிரச்சனைகளை தடுக்கவும், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும் ட்ராய் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும், அனுமதிக்கப்படாத அங்கீகரிப்படாத, URL இணைப்புகள் என்னும் இணையதள லிங்குகளை பிளாக் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் TRAI கேட்டுக் கொண்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் URL லிங்குகளை அனுப்பும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், முதலில், சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த இணைப்புகளை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும். 

ஆன்லைன் மோசடி மக்கள் ஆளாகாமல் தடுக்கும் வகையில், TRAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எஸ்எம்எஸ் மூலம் இணையதள லிங்குகளை அனுப்பி, தரவுகள் திருடப்படுவதில் இருந்து பயனர்களை பாதுகாக்க இந்த புதிய விதை வகை செய்யும். செல்போன் பயனர்களுக்கு SMS மூலம் அனுப்பப்படும் இணைப்பு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லை என்றால் அந்த இணைப்பு திறக்கப்படாது. இதன் மூலம் மோசடி இணைப்புகளிலிருந்தும் பயனர்கள் தப்பிக்கலாம். இந்த விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய விதியின் காரணமாக அக்டோபர் 1ம் தேதிக்குள் URL லிங்குகளை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்காத நிறுவனங்கள், அதனை SMS மூலம் அனுப்ப முடியாது என்பதால், சுமார் 3,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 70,000-க்கும் மேற்பட்ட URL லிங்குகளை அனுமதிப் பட்டியலில் சேர்த்துள்ளன என ட்ராய் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.