இன்று கள்ளக்குறிச்சியில் வி.சி.க சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின், “திருமாவளவன் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அணி மூலம் மது ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்தார். ஒரு வழக்கறிஞராக கடந்த 30 ஆண்டுகளில் குடும்ப நீதிமன்றம் குடும்ப வன்முறைகள் இந்த மதுவால்தன் நடக்கிறது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
எனவே குடும்ப வன்முறையை தடுக்க வேண்டுமென்றாலும், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியில் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டுமென்றாலும், இந்த மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மட்டுமல்ல, தேசியக் கொள்கையாக மத்திய அரசும் அறிவிக்க வேண்டும்.
மணியம்மை மூலம் மதுக்கடைகளை மூட பெரியார் போராட்டத்தை முன்னெடுத்தது போல, தலைவர் கண் அசைத்தால் போதும் இங்கு இருக்கும் எல்லா டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்து மூடவைப்போம். அது எங்களால் முடியும். சிறுத்தைகள் சிறைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.