“இந்தப் படத்தில் உங்களின் நடிப்பு என்னைக் கவர்ந்தது!" – யோகி பாபுவை பாராட்டிய பவன் கல்யாண்

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மண்டேலா, பொம்மை நாயகி, கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்கள் மூலம் அவ்வப்போது நடிகராகவும் மிளிர்கிறார்.

இவ்வாறிருக்க, தெலுங்கு நடிகரும், தெலங்கானா மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண், சமீபத்தில் தமிழ் ஊடக நேர்காணல் ஒன்றில், மண்டேலா திரைப்படத்தைக் குறிப்பிட்டு யோகி பாபுவின் நடிப்பு பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த யோகி பாபு, `உங்களின் வார்த்தைகளுக்கும், என்னை ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி’ என ட்வீட் செய்திருந்தார்.

நடிகர் யோகி பாபு

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் யோகி பாபுவை வாழ்த்தியிருக்கும் பவன் கல்யாண், “நன்றி, உங்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் நடிப்புத் திறமைக்கு நான் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். திரையில் உங்கள் படைப்புகள் எப்போதும் ஒரு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன. குறிப்பாக மண்டேலா படத்தில் நீங்கள் அளித்த நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது . எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து படைப்புகளும் சிறந்த வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.