மும்பை சிவ்ரியில் இருந்து நவிமும்பையை இணைக்கும் `அடல் சேது’ என்ற கடல் பாலத்தை கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இரண்டு நாளுக்கு முன்பு, மன அழுத்தம் காரணமாக வங்கி மேலாளர் ஒருவர் அடல் சேது என்ற இக்கடல் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது மேலும் ஒரு தொழிலதிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலிப் ஷா என்ற அத்தொழிலதிபர் கார்மெண்ட் வியாபாரம் செய்து வருகிறார். அவர் நேற்று தனது மனைவியிடம் நவிமும்பையில் நடக்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ளவதாக கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. காரில் சென்று காரை கடல் பாலத்தில் நிறுத்திவிட்டு அதிலிருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடல் பாலத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் இது குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவரை 3 படகுகளில் சென்று தேட ஆரம்பித்தனர்.
அவரது உடல் கரை ஒதுங்கியது. குடும்பம், தொழிலில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று அவருடன் படித்த ரஞ்சித் தெரிவித்தார். தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம், கடன் தொல்லையால் மக்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண கடல் பாலத்தில் உடனே தடுப்பு வலைகள் அமைக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடல் பாலம் திறக்கப்பட்டதில் இருந்து இது வரை 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இப்பாலத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கார்களில் வருகின்றனர். அவர்கள் கார்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கடலை பார்க்கின்றனர். தற்போது கார்களை பாலத்தின் இடையில் நிறுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாந்த்ரா-ஒர்லி இடையே அமைக்கப்பட்டுள்ள கடல் பாலத்தில் இது போன்ற தற்கொலைகள் நடந்தது. ஆனால் அதில் இப்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுவிட்டது. இதே போன்று மும்பையில் இருக்கும் தலைமை செயலகத்திலும் மேல் மாடியில் இருந்து சிலர் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அங்கும் தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group, இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…