கடந்த ஜூலை மாதத்தில், ஜியோ, ஏர்டெல் வோடபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரித்தன. தனியார் நிறுவனங்கள் 15% வரை கட்டணத்தை உயர்த்தின. இதன் காரணமாக மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல்லுக்கு பலர் மாறினர். அதன் பின்னர், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சில புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சுமார் 47 கோடி சந்தாதாரர்களை வைத்துள்ள, ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO) இப்போது கொண்டு வந்துள்ள ரூ.999 மற்றும் ரூ.899 ஆகிய இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் எது சிறந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். சுமார் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் பலன்களை ஆராயலாம்.
ஜியோ ரூ.999 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ 999 கட்டணத்தில் பெறலாம். 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இதில் தினமும் 2ஜிபி டேட்டா வசதி, வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பு வசதி ஆகியவை கிடைக்கும். நீங்கள் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் பகுதியில் இருந்தால், வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக 196ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ.899 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ. 899 கட்டணத்தில் பெறலாம். 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இதில் தினமும் 2ஜிபி டேட்டா வசதி, வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பு வசதி ஆகியவை கிடைக்கும். இது தவிர, 5ஜி நெட்வொர்க் பகுதிகளில் 20ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் வரம்பற்ற டேட்டாவையும் பெறலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக 200ஜிபி டேட்டா கிடைக்கும்.
ரூ.899 மற்றும் ரூ.999 – இரண்டில் எந்த திட்டம் சிறந்தது?
ஜியோவின் ரூ.999 மற்றும் ரூ.899 திட்டங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஆனால் இரண்டு திட்டங்களுக்கும் இடையே இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. ரூ.899 திட்டமானது 90 நாட்களுக்கானது மற்றும் 200ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. அதே நேரத்தில், ரூ.999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் 196 ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது.
எனவே, நீங்கள் ரூ.999 திட்டத்திற்குச் சென்றால், நீங்கள் ரூ.100 அதிகமாகச் செலவழிக்க வேண்டும், ஆனால் ரூ.899 திட்டத்தை விட 4ஜிபி குறைவான டேட்டாவைப் பெறுவீர்கள். இருப்பினும், ரூ.999 திட்டம் கூடுதலால 8 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ஆனால் உங்களுக்கு 20ஜிபி கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், ரூ.98 கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்த 20ஜிபி டேட்டா ரூ.899 திட்டத்தில் இலவசமாக கிடைக்கும்.